'அவசர அவசரமாக ஓடிவந்த டு பிளசிஸ்!.. சாம் கரனை அழைத்து... தனியாக பேச்சுவார்த்தை'!.. மேட்ச்சை புரட்டிப் போட்ட சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வெற்றிபெற சாம் கரனின் ஓவர் மிக முக்கியமானதாக அமைந்துள்ளது.

2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மிகவும் சிறப்பாக ஆடி வருகிறது. பேட்டிங், பவுலிங் இரண்டிலும் சிஎஸ்கே அணி கலக்கிக்கொண்டு இருக்கிறது. முதல் போட்டியில் தோல்வி அடைந்தாலும் அடுத்த இரண்டு போட்டிகளில் சிஎஸ்கே வென்றுவிட்டது.

ராஜஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே 20 ஓவரில் 9 விக்கெட்டிற்கு 188 ரன்கள் எடுத்தது. அதையடுத்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் முதல் 10 ஓவர்களில் சிஎஸ்கே ஆடிய விதம் பெரிய அளவில் அதிர்ச்சி அளித்தது.

சிஎஸ்கேவின் பவுலிங்கை முதல் 10 ஓவர்களில் ராஜஸ்தான் அணி வெளுத்து வாங்கியது. மேட்ச் சிஎஸ்கேவிடம் இருந்து நழுவிக்கொண்டிருந்த சமயம் அது. அப்போதுதான் ஜடேஜாவும், மொயின் அலியும் வரிசையாக விக்கெட்டுகளை எடுத்தனர். 

ஆனால், இதற்கு சாம் கரன்தான் வலிமையான அடித்தளம் போட்டுக்கொடுத்தார். சாம் கரன் வீசிய 4வது ஓவரில் மனன் வோஹ்ரா அவுட் ஆனார். அதன்பின் சாம் கரன் சில பவுண்டரிகள் கொடுத்தாலும் பெரிதாக ரன்களை கொடுக்கவில்லை.

சாம் கரன் அதன்பின் 6வது ஓவரில் சஞ்சு சாம்சனுக்கு பவுலிங் செய்யும் முன் எப்படி வீசுவது என்று குழப்பத்தில் இருந்தார். அப்போது டு பிளசிஸ் வேகமாக சாம் கரனிடம் வந்து தீவிரமாக எதையோ பேசிக்கொண்டிருந்தார். அதன் பின் சாம் கரன் வேறு மாதிரி பவுலிங்ஸ் செய்தார். அந்த ஓவரில் அடுத்தடுத்து ஸ்லோவான ஷார்ட் பந்துகளை மட்டும் வீசினார். இதனால் சஞ்சு சாம்சன் கொஞ்சம் திணறினார். 

அதை நன்றாக உணர்ந்து கொண்ட சாம் கரன் தொடர்ந்து அதேபோல் பவுலிங் செய்தார். அப்போது சஞ்சு சாம்சன் அவசரப்பட்டு ஸ்லோ ஷார்ட் பந்து ஒன்றை அடித்தார். இது சரியாக மாட்டாத காரணத்தால் பிராவோ கையில் கேட்ச்சாக மாறியது. சஞ்சு சாம்சன் இதற்கு முன் இதேபோல் பல முறை அவுட்டாகி இருக்கிறார்.

எனவேதான் இதே மாதிரி பவுலிங் போடும்படி டு பிளசிஸ் அறிவுரை வழங்கி இருக்கலாம் என்று ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். டு பிளசிஸ் இந்த அறிவுரையைத்தான் குறிப்பிட்டாரா என்று உறுதியாக தெரியவில்லை என்றாலும், அவர் பேசிவிட்டு போன அடுத்த சில பந்துகளில் சாம் கரன் இந்த விக்கெட்டை எடுத்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்