'கண்ணா... 2 லட்டு தின்ன ஆசையா'!?.. போட்ட ப்ளானை பக்காவாக முடித்த ருத்துராஜ் - டு ப்ளசிஸ்!.. அசைக்க முடியாத இடத்தில் சிஎஸ்கே!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த அந்த அணியில் தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் பேர்ஸ்டோ முதல் ஓவரின் 2வது பந்தில் அவுட்டாக வாய்ப்பு இருந்தது. தோனி கேட்சை தவறவிட்டார். எனினும், அவர் அடுத்த சில ஓவர்களில் 7 ரன்களுக்கு நடையை கட்டினார். இதனால் அந்த அணி 22 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது.
பின்னர் களமிறங்கிய மணிஷ் பாண்டே - கேப்டன் டேவிட் வார்னருடன் சேர்ந்து சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். முதலில் நிதானமாக ஆடிய இந்த ஜோடி பின்னர் சீரான இடைவெளியில் பவுண்டரிகளை அடித்து ரன்னை உயர்த்தினர். அதன் காரணமாக 6 ஓவர்கள் முடிவில் 39 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த அணி முதல் விக்கெட்டிற்கு 106 ரன்கள் சேர்த்தது.
சிறப்பாக ஆடி கேப்டன் டேவிட் வார்னர் 55 பந்துகளில் 57 ரன்கள் அடித்து அவுட்டானார். இதில் 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கும். மணிஷ் பாண்டே 46 பந்துகளில் 61 ரன்கள் அடித்து வெளியேறினார். மணிஷ் பாண்டே சிக்ஸர் அடிக்க முயன்ற பந்தை பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த டூப்ளசிஸ் சூப்பர் டைவ் மூலம் கேட்ச் பிடித்து அசத்தினார்.
பின்னர் களத்திற்கு வந்த கேன் வில்லியம்சன் தொடக்கம் முதலே அதிரடி காட்டினார். ஷர்துல் தாக்கூர் வீசிய 19வது ஓவரில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் என சிதறடித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 171 ரன்கள் எடுத்தது. கேன் வில்லியம்சன் 10 பந்துகளில் 26 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியில் சிறப்பான தொடக்கம் கிடைத்தது. தொடக்க வீரர்கள் டுப்ளசிஸ் - ருத்ராஜ் கெயிக்வாட் ஆட்டத்தின் முதல் ஓவர் முதலே அதிரடி காட்டி ரன்னை உயர்த்தினர். இதனால் 6 ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் குவித்தது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் ஐதராபாத் அணி திணறியது.
இறுதியில் ஆட்டத்தின் 13வது ஓவரில் ரஷித் கான் இந்த ஜோடியை பிரித்தார். தொடக்க வீரர் ருத்ராஜ் கெயிக்வாட் 44 பந்துகளில் 75 ரன்களை அடித்து அவுட்டானார். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 129 ரன்கள் எடுத்தது.
இதன் பின்னர் ஆட்டத்தின் 15வது ஓவரில் டுப்ளசிஸ் 55 ரன்கள் மற்றும் மொயின் அலி 15 ரன்களுடனும் அவுட்டாகினர். பின்னர் வந்த ரெய்னா ஜடேஜா மெதுவாக ரன் சேர்க்க சென்னை அணி 18.3 ஓவர்களில் 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதனால், புள்ளிப் பட்டியலில் சிஎஸ்கே முதல் இடத்திற்கு மீண்டும் முன்னேறியது மட்டுமின்றி, அசைக்க முடியாத நெட் ரன் ரேட்டுடன் உள்ளது. இந்த அதிகப்படியான ரன் ரேட் சிஎஸ்கேவுக்கு லீக் சுற்றின் இறுதிப் போட்டிகளில் பெரிதும் கைகொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மெல்ல மெல்ல... பேட்டுக்கு வலிக்கப் போகுது'!.. 'நல்லா அடிச்சு ஆடுய்யா'!.. விரக்தியில் கடுப்பான கவாஸ்கர்!.. என்ன நடந்தது?
- ‘நேத்தே எங்க பாய்ஸ் அதை சொன்னாங்க’!.. டாஸ் போடுறதுக்கு முன்னாடியே மாஸ்டர் ‘ப்ளான்’ போட்ட ‘தல’!
- 'அய்யா... எல்லாரும் மன்னிச்சுடுங்க!.. உண்மைய சொல்லிடுறேன்!'.. டெல்லி அணியில் புதிதாக கிளம்பிய பூதம்!.. உளறிக் கொட்டிய பாண்டிங்!
- ‘அவரை எங்களுக்கே கொடுத்திருங்க’!.. சிஎஸ்கே வீரரை கேட்கும் ராஜஸ்தான்.. மாற வாய்ப்பு இருக்கா..?
- அவரு போனா என்ன...! இப்போ நாங்க புது ஆள 'சிஎஸ்கே-ல' இருந்து புடிச்சிட்டோம்...! 'வேற லெவல்' கொண்டாட்டத்தில் ஆர்சிபி ரசிகர்கள்...!
- VIDEO: ‘என்ன திடீர்னு இப்படி மாறிடுச்சு’!.. மேட்சை நடத்தலாமா?.. வேண்டாமா?.. நேத்து போட்டியை ‘10 நிமிடம்’ தாமதமாக்கிய சம்பவம்..!
- ‘இனி அதுக்கெல்லாம் அனுமதி கிடையாது’!.. நாடு முழுவதும் கொரோனா பரவல் எதிரொலி.. ஐபிஎல் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு..!
- ‘அவரோட கேப்டன்ஷிக்கு 10-க்கு 5 மார்க் கூட கொடுக்க மாட்டேன்’!.. ரொம்ப காட்டமாக பேசிய சேவாக்..!
- 'மனசெல்லாம் பாரமா இருக்கு!.. அத பார்த்து ஒடஞ்சு போயிட்டேன்'!.. பிரெட் லீ வீசும் பந்தின் வேகம் மட்டுமல்ல... அவரோட பாசமும் ரொம்ப அதிகம்!!
- VIDEO: ‘ரூல்ஸ்படி நீங்க அப்படி பண்ணுனது தப்பு’!.. சட்டென பவுலிங்கை நிறுத்தி ‘வார்னிங்’ கொடுத்த அம்பயர்..!