தளபதி படத்தில வர சூர்யா - தேவாவுக்கு அடுத்து... நட்புக்கு புது வடிவம் கொடுத்தது ரெய்னா - ஜடேஜா தான்!.. கசிந்தது ரகசியம்!.. பிசிசிஐ மனசு மாறுமா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ஜடேஜா அசத்தல் ஆட்டம் காட்டியது குறித்து சுரேஷ் ரெய்னா மனம் திறந்துள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் சிஎஸ்கே வீரர் ஜடேஜா மிரட்டி இருந்தார். முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்களை எடுத்தது. பின்னர், ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 122 ரன்களே எடுத்தது.

இந்த போட்டியில் சென்னை அணி பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் திணறிய போது ரவீந்திர ஜடேஜா 22 பந்துகளில் 62 ரன்கள் அடித்து அசத்தினார். இதில் அதிரடி ஆட்டம் தான் சிஎஸ்கே 191 ரன்கள் அடிக்க உதவியது. இதில் 5 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கும்.  குறிப்பாக, ஹர்ஷல் பட்டேல் வீசிய கடைசி ஓவரில் மட்டும் 37 ரன்கள் விளாசினார்.

இதே போல பந்துவீச்சிலும் வாஷிங்டன் சுந்தர், மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், டேன் கிறிஸ்டியன் ஆகியோரின் விக்கெட்களை எடுத்தார். இதனால் ஜடேஜா மீண்டும் பழைய ஃபார்முக்கு வந்துவிட்டதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில் ஜடேஜாவின் ஆட்டம் குறித்து சுரேஷ் ரெய்னா பேசியுள்ளார். அதில் அவர், ஜடேஜா பேட்டிங் நன்றாக உள்ளது. பவுலிங் நன்றாக உள்ளது. இந்த தொடரில் 7 -8 கேட்ச்களை பிடித்துள்ளார். அவரை போன்ற ஒரு வீரர் இந்திய அணியின் 3 வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் கண்டிப்பாக இருக்க வேண்டும். 

ஜடேஜா கடுமையாக உழைக்கக் கூடியவர். என்னை பொறுத்தவரை உலகின் நம்.1 வீரர்களில் ஜடேஜாவும் ஒருவர். ஃபீல்டிங்கிற்காக அவர் உடலை வலைத்துக்கொள்ளும் விதம் அற்புதமானது. ஆட்டத்தை மாற்றி அமைக்கக்கூடிய வீரர் என்றே கூறலாம்.

யார் கேப்டனாக இருந்தாலும் ஜடேஜா அணியில் வேண்டும் எனக்கூறுவார்கள். ஆட்டம் சாதகமாக அமையாத போது, ஒரு கேட்ச், ரன் அவுட் அதனை மாற்றும் என்றால், அதனை செய்யக்கூடிய வீரராகத்தான் ஜடேஜா உள்ளார் என தெரிவித்துள்ளார்.

ஆனால், சமீபத்தில் வெளியான பிசிசிஐ-யின் வீரர்களின் ஒப்பந்த பட்டியலில் ஜடேஜாவுக்கு A+ க்ரேடு வழங்கப்படவில்லை. இதுகுறித்து, இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன் அப்போதே பிசிசிஐ மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். A+ க்ரேடில் இருக்கும் வீரர்கள், இந்திய அணி விளையாடும் டெஸ்ட், ஒரு நாள், மற்றும் டி20 போட்டிகள் என அனைத்து வகை ஆட்டங்களிலும் நிச்சயம் இடம் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்