'யாரு கண்ணு பட்டுச்சோ... சென்னை அணிக்கு அடி மேல அடி விழுது!.. ரசிகர்களை கலக்கமடையச் செய்த சம்பவம்'!.. 'போன வருஷமே நிறைய இழுந்துட்டோம்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குள் கொரோனா நுழைந்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

14வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் வரும் 9ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இதற்காக வீரர்கள் பாதுகாப்பான முறையில் தங்கவைக்கப்பட்டு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நிலையில், இந்தாண்டு இந்தியாவில் மொத்தம் 6 நகரங்களில் நடைபெறவுள்ளது.

இதற்காக அனைத்து அணி விரர்களும் ஹோட்டல் அறையில் பாதுகாப்பான முறையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவ்வளவு பாதுகாப்பையும் மீறி சென்னை அணிக்குள் கொரோனா தொற்று நுழைந்துள்ளது. 

சி.எஸ்.கே அணியின் ஊழியர்கள் மற்றும் வீரர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தன. இதில் ஊழியர் ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த ஊழியர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவர் எந்த வீரருடனும் தொடர்பில் இல்லாததால், வீரர்கள் யாருக்கும் எந்த பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது. 

கடந்த ஆண்டு சென்னை அணியின் சொதப்பலுக்கு கொரோனாவும் முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. கடந்த சீசனீல் மட்டும் சென்னை அணியில் 13 பேருக்கு கொரோனா உறுதியானது. இதில் வீரர்கள் தீபக் சஹார், ருத்ராஜ் கெயிக்வாட் ஆகியோரும் அடங்குவர். எனினும் பின்னர் அவர்கள் கொரோனாவில் இருந்து மீண்டு போட்டியில் கலந்துக்கொண்டனர். 

இந்தாண்டு ஐபிஎல் தொடரில் 3வது கொரோனா பாதிப்பு இதுவாகும். சற்று நேரத்திற்கு முன்பு டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் அக்சர் பட்டேலுக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியானது. அதே போல 2 நாட்களுக்கு முன்னர் கொல்கத்தா அணி வீரர் நிதிஷ் ராணாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதனால் ஐபிஎல் தொடர் கொரோனாவால் பாதிக்கப்படுமோ என்ற அச்சம் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்