போச்சு!.. இனி அவ்ளோதான்!.. மனசாட்சி இல்லையா?.. எப்போ வீட்டுக்கு போவோம்னு தெரியாத மைக் ஹசி!.. பயங்கரமான லாக்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் மைக் ஹசியை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதில் புது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் அணிகளில் பபுள்களில் கொரோனா வைரஸ் நுழைந்ததால் தொடர் பாதியிலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. முதலில் கொல்கத்தா வீரர் வருண் சக்கரவர்த்திக்கு உறுதியான கொரோனா அடுத்தடுத்து சிஎஸ்கே, ஐதராபாத், டெல்லி அணிகளுக்கும் பரவியிருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதலில் பவுலிங் பயிற்சியாளர் லட்சுமிபதி பாலாஜிக்கு தொற்று உறுதியான நிலையில் அடுத்ததாக பேட்டிங் பயிற்சியாளரும், ஆஸ்திரேலிய முன்னாள் வீரருமான மைக் ஹசிக்கும் பரவியது. அதைத்தொடர்ந்து, அவர் டெல்லியில் இருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கு ஆஸ்திரேலிய அரசு வரும் மே 15ம் தேதி வரை தடைவிதித்துள்ளது. ஐபிஎல் தொடரில் பங்கேற்றிருந்த ஆஸ்திரேலிய வீரர்கள் 37 பேர் மாலத்தீவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் மே 15ம் தேதிக்கு பின்னர் நாடு திரும்பவுள்ளனர். மைக் ஹசி பூரண குணமடைந்த பிறகு மாலத்தீவு செல்வார் என திட்டமிடப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவில் இருந்து வருபவர்கள் மாலத்தீவுக்குள் நுழைய அந்த அரசு தடைவிதித்துள்ளது. இதனால் மைக் ஹசி குணமடைந்தால் அவரை மாலத்தீவுக்கு அனுப்புவதில் சிஎஸ்கே நிர்வாகத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தற்போது ஒரு வாரத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வரும் ஹசிக்கு நாளை மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது. அதில் நெகட்டீவ் என வந்தால் சென்னையிலேயே அவர் தங்க வேண்டியது சூழ்நிலை ஏற்படும்.
இதுகுறித்து பேசிய சிஎஸ்கே செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், மைக் ஹசியால் சக வீரர்களுடன் மாலத்தீவில் இணைய முடியாதுதான். ஆனால், அவரின் பயணம் குறித்து தற்போதே எந்த முடிவும் எடுக்க முடியாது. ஏனெனில், ஹசியின் உடல் நிலை தான் தற்போது முக்கியம். அவருக்கு முதலில் கொரோனா நெகட்டீவ் என முடிவுகள் வரட்டும். அதன் பிறகு அவரை தாய் நாட்டிற்கு அனுப்புவது குறித்து திட்டமிடலாம்.
மைக் ஹசிக்கு நாளை கொரொனா பரிசோதனை நடத்தப்படவுள்ளது. நாளை மறுநாள் தான் முடிவு தெரியவரும். எனவே நாங்கள் பொறுமையாக இருந்து மைக் ஹசியின் உடல் நலத்திற்கே முன்னுரிமை அளித்து வருகிறோம். அவரின் உடல்நிலை நன்கு தேறிவருகிறது எனத்தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'தம்பி... நான் சொல்றத நீ செஞ்சா... உனக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கு'!.. பண்ட் கரியரை மாற்றப் போகும் கவாஸ்கரின் ப்ளான்!
- "'கிரிக்கெட்'ல மட்டுமில்ல, 'லவ்'லயும் பையன் 'மாஸ்டர்' தான் போல.. எப்படி எல்லாம் 'ஃபீல்' பண்றாரு பாருங்கய்யா.." வைரலாகும் சுட்டிக் குழந்தையின் 'இன்ஸ்டா' பதிவு!!
- 'இப்படி ஒரு குறைய வச்சுகிட்டு... இந்திய அணி எப்படி சமாளிக்க போகுது'?.. ஆட்டத்தின் போக்கை மாற்றப் போகும் அந்த வீரர் யார்?
- ‘உலகத்துல எங்க மேட்ச் நடந்தாலும் நேர்ல போய் பார்ப்பேன்’.. ‘அந்த அளவுக்கு அவரோட தீவிர ரசிகன்’.. இந்திய ‘ஸ்டார்’ ப்ளேயரை தாறுமாறாக புகழ்ந்த கிரிக்கெட் ஜாம்பவான்..!
- 'ஆஹா... சூனா பானா... நம்ம அருமை பெருமைக்கு ஆப்பு வச்சிருவாங்க போலயே'!.. 'எந்த நேரமும் தூக்கலாம்'!.. பரிதவிப்பில் பாண்டியா!
- 'டீம் எல்லாம் நல்லா தான் இருக்கு!.. ஆனா 'இத' மறந்துட்டீங்களே'!.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்... இந்திய அணியில் சிக்கல்!!
- 'ஆமா... ஐபிஎல் தான் முக்கியம்!.. அதுக்கு என்ன இப்போ'?.. சொந்த நாட்டை எதிர்த்து பீட்டர்சன் கொந்தளிப்பு!.. பூதாகரமாகும் சர்ச்சை!
- 'நாம ஒரு ரூட்ட புடிச்சு முன்னேற நெனச்சா... நமக்கு முன்னாடி அங்க ஏழரை காத்திட்டு இருக்கே'!.. இந்தியா - இலங்கை டூர் போச்சா?
- இந்த மேட்டர் அவருக்கு தெரியுமா? தெரியாதா?.. கொஞ்சம் பார்த்து விளையாடுங்க!.. இந்திய அணியின் எதிர்காலம் பும்ரா வசம்!!
- 'யாரும் வருத்தப்பட தேவையில்ல... இந்தியாவிலேயே ஜாம் ஜாம்னு ஐபிஎல் நடத்தலாம்'!.. பிசிசிஐ வட்டாரத்தில் புது ப்ளான்!