'ஆத்தாடி!.. அடுத்த மேட்ச் நம்ம கூட தான் ஆடப் போறாங்களா'!?.. தீபக் ஹூடாவின் வெறித்தனத்தை... நய்யாண்டி செய்த சிஎஸ்கே!.. என்ன ப்ளானா இருக்கும்?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

2021 ஐபிஎல் சீசனின் நேற்றைய (12.4.2021) போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன் காரணமாக முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் ருத்ர தாண்டவம் ஆடியது.

பஞ்சாப் அணியில் ஓப்பனிங் இறங்கிய அந்த அணியின் கேப்டன் கே எல் ராகுலும், பின்னர் களமிறங்கிய தீபக் ஹூடாவும் பார்ட்னர்ஷிப் அமைத்து பந்தை நாலா பக்கமும் சிதறடித்தனர்.

ராஜஸ்தான் அணி பந்துவீச்சில் என்னென்னவோ மாற்றம் செய்து முயற்சித்த போதிலும், ராகுல்-ஹூடா பார்ட்னர்ஷிப்பை அசைக்க கூட முடியவில்லை. இதன் விளைவாக, பஞ்சாப் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்து 200-ஐ கடந்தது. 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் 6 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது.

பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் 50 பந்துகளில் 91 ரன்களும் (7 ஃபோர், 5 சிக்ஸ்), தீபக் ஹூடா 26 பந்துகளில் 64 ரன்களும் (4 ஃபோர், 6 சிக்ஸ்) குவித்தனர்.

இந்நிலையில், தீபக் ஹூடாவின் அதிரடி ஆட்டம் குறித்து சிஎஸ்கே பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.

சிஎஸ்கேவுக்கு அடுத்த மேட்ச் பஞ்சாப் அணியுடன் என்பதால், அதை சுட்டிக் காட்டி, "ஹூடா, ரொம்ப நல்லது டா. ஆனா அடுத்த மேட்ச்க்கு வேண்டாம் டா" என்று நய்யாண்டியாக சிஎஸ்கே ட்வீட் செய்துள்ளது.

 

 

கடந்த சீசனில் சென்னை அணி ப்ளே ஆஃப் கூட செல்லாமல் வெளியறிய பின், இந்த சீசனில் டெல்லி அணியுடன் மோதிய முதல் மேட்ச்சிலும் தோல்வியைத் தழுவியது. இப்படி சிஎஸ்கேவின் தொடர்ச்சியான தோல்விகளால் துவண்டு போயுள்ள ரசிகர்கள், தற்போது வெறித்தனமான ஃபார்மில் உள்ள பஞ்சாப் அணியை அடுத்த போட்டியில் எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் செய்வது அறியாது பதறிப்போய் உள்ளனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்