'இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே'!.. 'ஹசல்வுட் விலகல்... பவுலருக்கு பதிலாக பேட்ஸ்மேனை இறக்க சிஎஸ்கே அதிரடி வியூகம்'!.. வாயடைத்துப் போன கிரிக்கெட் விமர்சகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஹசல்வுட்டுக்கு மாற்றாக சென்னை அணி பேட்டிங்கில் கவனம் செலுத்தி பேட்ஸ்மேனை வாங்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு ஐபிஎல்-ல் come back கொடுப்பதற்காக சென்னை அணி தீவிரமாக தயாராகி வருகிறது. ஆனால், முக்கிய பவுலரான ஹசல்வுட் தொடரில் இருந்து விலகியிருப்பது அந்த அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாற்று வீரர் குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என அணி நிர்வாகம் கூறியுள்ள நிலையில் அவருக்கு மாற்றாக சென்னை அணி ஒரு அதிரடி பேட்ஸ்மேனை களமிறக்க வாய்ப்புள்ளது.
சென்னை அணியால் கடந்தாண்டு ரூ.2 கோடிக்கு வாங்கப்பட்ட பவுலர் ஹாசல்வுட், இந்தாண்டு கடைசி நேரத்தில் தொடரில் இருந்து விலகினார். இவருக்கு மாற்று பவுலர் குறித்து சென்னை அணி இன்னும் முடிவெடுக்கவில்லை. ஹசல்வுட்டுக்கு பதிலாக பவுலிங்கில் லுங்கி நெகிடி, சாம் கரண் ஆகியோர் உள்ளனர். எனவே, அவருக்கு பதிலாக அணியில் பேட்ஸ்மேனை எடுக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடக்கூடியவர். இதுவரை 60 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடியுள்ள அவர், 1644 ரன்கள் விளாசியுள்ளார். இவரின் ஸ்டைர்க் ரேட் 136.66 மற்றும் சராசரி ரன் விகிதம் 31.02 ஆகும். ஐபிஎல்-ல் ஐதராபாத் அணிக்காக 6 போட்டிகளில் ஆடியுள்ள இவர் 148 ரன்கள் எடுத்தார். எனினும், அவர் தற்போது நல்ல ஃபார்மில் உள்ளதால் சென்னை அணிக்கு உதவுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நியூசிலாந்து வீரரான டேவான் கான்வாய் இதுவரை 14 சர்வதேச போட்டிகளிலேயே ஆடியுள்ளார். எனினும் அவர் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அவர் விளையாடியுள்ள 11 சர்வதேச டி20 போட்டிகளில், 6 அரை சதத்தையும் விளாசியுள்ளார். இதில் இரண்டு முறை 90+ ரன்களாகும். சராசரி 59.12 ரன்களாகும். ஐபிஎல்-ல் பல அணிகள் தங்களது வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் இவரை வாங்கிவிடலாம் என டார்கெட் செய்துள்ளது. எனவே இவரை சி.எஸ்.கேவில் 4வது வீரராக களமிறக்க வாய்ப்பளித்தால் அணியின் ஸ்கோர் நன்றாக உயரும் என கருதப்படுகிறது.
நியூசிலாந்து அணியின் தொடக்க வீரரான மார்ட்டின் கப்தில் சர்வதேச போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேனாக வலம்வருபவர். டி20 போட்டிகளில் இவரின் பெயர் பல்வேறு சாதனை பட்டியல்களில் இடம்பெற்றுள்ளது. டி20 போட்டிகளில் இதுவரை 2939 ரன்களை குவித்துள்ளார். ஆனால் இவருக்கு ஐபிஎல் தொடர் சரியாக அமையவில்லை.
மும்பை, பஞ்சாப், ஐதராபாத் என 3 அணிகளுக்காகவும் சேர்த்து மொத்தமாக 13 போட்டிகளிலேயே ஆடியுள்ளார். அதில் 270 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். எனவே, இந்தாண்டு சென்னை அணி இவரை எடுத்தால் ஓப்பனிங்கில் சிறப்பாக ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வெளிநாட்டு வீரர்கள ஓவரா நம்பாதீங்க!.. 'உங்களுக்கு கை கொடுக்கப் போவது 'இந்த' 'தமிழ்நாட்டு தங்கம்' தான்'!.. 'ஆர்சிபி அணிக்கு அடித்த ஜாக்பாட் இவர்'!!
- 'நான் சிம்பிளா ஒண்ணு சொல்றேன்...' ஐபிஎல் நடக்குறப்போ 'அத' மட்டும் பண்ணிடாதீங்க ப்ளீஸ்...! - முன்னாள் வீரர் வேண்டுகோள்...!
- மனக் கோட்டை கட்டி வைத்த 'சிஎஸ்கே' ரசிகர்கள்... சுக்கு நூறாக்கிய முன்னாள் 'சென்னை' வீரரின் 'ட்வீட்'.. கடுப்பாகி 'ரசிகர்கள்' போட்ட 'கமெண்ட்ஸ்'!.. 'பரபரப்பு' சம்பவம்!!
- அடுத்த 10 வருசத்துக்கு 'அவரு' தான் கிங்...! 'என்னமா பேட்டிங் பண்றாரு...' இந்த வயசுலையே இப்படியா...! - புகழ்ந்து தள்ளும் சரண்தீப் சிங் ...!
- ஆப்ரேஷனுக்கு தேதி குறிச்சுட்டாங்க!.. சீக்கிரம் மீண்டு வாங்க ஷ்ரேயாஸ்!.. ஐபிஎல் போனா பரவால்ல... இந்திய அணி மிடில் ஆர்டரில் நடக்கப் போகும் மாற்றங்கள் என்ன?
- இப்ப புரியுதா?.. ஏன் 'மும்பை இந்தியன்ஸ்' அணி இவ்ளோ strong-அ இருக்காங்கனு?.. மற்ற அணிகளை அலறவிடுவதற்கு காரணம் 'இது' தான்!
- VIDEO: ‘பாசமா கட்டிப்புடிச்சாருன்னு பாத்தா, இப்படி ட்விஸ்ட் பண்ணிட்டாரே’!.. வசமாக சிக்கிய ‘சின்ன தல’.. அடக்கமுடியாமல் சிரித்த வீரர்கள்..!
- "இது வெறும் 'டீம்' மட்டும் கிடையாது, அதுக்கும் மேல..." 'ஜடேஜா' போட்ட 'ட்வீட்'... கொண்டாடித் தீர்த்த 'சிஎஸ்கே' ரசிகர்கள்!!
- '13 வருஷ கனவு... இந்த முறை ரொம்ப நம்பிக்கையா இருக்கோம்!.. தட்டி தூக்குறோம் பாருங்க'!.. விராட் கோலியின் வியூகம் என்ன?
- ‘கவனமாக இருங்க’!.. ‘நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்’.. சச்சின் டெண்டுல்கர் திடீர் அறிவிப்பு..!