'அடப்பாவிங்களா... அவுட் இல்லயா'?.. ரன் அவுட் ஆகியும் நாட் அவுட்டான டு ப்ளசிஸ்!.. மேட்ச்சின் நடுவே நடந்த ட்விஸ்ட்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சிஎஸ்கே வீரர் டு ப்ளசிஸ் ரன் அவுட்டாகியும் அவுட்டாகாத விதி பயன்படுத்தப்பட்டுள்ளது.
2021 ஐபிஎல் தொடரின் 27வது லீக் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது.
இந்த இரண்டு அணிகளுமே ஐபிஎல் தொடரில் பலம் வாய்ந்த சாம்பியன் அணிகளாக விளங்குவதால் இப்போட்டியானது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தார். அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் நிலையில் 4 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களை அடித்து குவித்தது. இதனை தொடர்ந்து தற்போது 219 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாட தயாராகி வருகிறது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான டு ப்ளசிஸ் 27 ரன்கள் அடித்திருந்த போது மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட் கீப்பரான குயின்டன் டீ காக் அவரின் ரன் அவட்டை தவறவிட்டார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் பௌலர் ஜேம்ஸ் நீஷம் வீசிய 10வது ஓவரின் மூன்றாவது பந்தை மிக் விக்கெட் திசைக்கு அடித்துவிட்டு இரண்டு ரன் ஒட முயற்சித்தார் டு ப்ளசிஸ்.
ஆனால், அவர் கிரீசிற்கு வருவதற்கு முன்பே பந்து டீ காக்கிடம் வந்துவிட்டது. ஆனால், அவர் பந்தை பிடித்து அடிப்பதற்கு முன்பே, ஸ்டம்பில் இருந்த பைல்ஸை தவறுதலாக தட்டிவிட்டிருந்தார். இதனை ரீப்ளே செய்து பார்க்கும் போது நன்றாக தெரிந்தது. எனவே டுயூப்ளசிஸ் கிரீசிற்குள் வராமல் இருந்திருந்தாலும் அவருக்கு மூன்றாவது நடுவர் நாட் அவுட் வழங்கினார்.
மேலும், பந்து கைக்கு வரும் முன் பைல்ஸ் கீழே விழுந்தால் பந்தை பிடித்ததும் ஸ்டம்பை கையில் எடுக்க வேண்டும். ஆனால் அதற்குள் டூபிளெஸ்ஸிஸ் கிரீசுக்குள் வந்ததால் அந்த விதிமுறையின் படி ரன் அவுட்டில் இருந்து தப்பித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்ட டு ப்ளசிஸ் அற்புதுமாக ஆடி அரைசதம் அடித்தார். 28 பந்துகளை எதிர்கொண்ட டு ப்ளசிஸ் 50 ரன்கள் அடித்து பொல்லார்ட் வீசிய பந்தில் அவுட்டானார். இதில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடக்கம்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பறிபோனது டேவிட் வார்னரின் கேப்டன் பதவி!.. ஹைதராபாத் அணி நிர்வாகம் அதிரடி முடிவு!.. என்ன நடந்தது?
- 'என்ன நெனப்புல ஆடுறீங்க'?.. 'திரும்ப திரும்ப ஒரே தவறை செய்த படிக்கல்'!.. களத்திலேயே காண்டான கோலி!
- 'பேச்சாடா பேசுனீங்க!.. கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க!'.. பங்கமாய் கலாய்க்கும் ரசிகர்கள்!.. ஆர்சிபியை பஞ்சாப் கிங்ஸ் ஊதித் தள்ளியது எப்படி?
- 'கிரிக்கெட்ல ஜெயிச்சுட்டாரு!.. காதல்லயும் ஜெயிப்பாரா'?.. 'ஆசை ஆசையாய் வாழ்த்திய தோழி'!.. க்ளீன் போல்டு ஆவாரா ப்ரித்வி ஷா?
- தப்பி தவறிக் கூட ரஸலுக்கு 'அந்த பால்' மட்டும் போடக்கூடாதுன்னு தெளிவா இருந்தோம்...! 'நாங்க மூணு பேரும் டிஸ்கஸ் பண்ணிட்டு தான் போனோம், ஆனால்...' - போட்ட 'ப்ளானை' பகிர்ந்த இளம் வீரர்...!
- 'நீ பழனிக்கே பால் காவடி எடுத்தாலும்... உனக்கு பந்து வீச மாட்டேன்!'.. 'என்ன கேப்டன்னு கூட பார்க்காம.. பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு'?.. ஜாமிசன் அதிரடி!
- ஏங்க, நான் 'அப்படிலாம்' சொல்லவே இல்லங்க...! ஐபிஎல் போட்டிகளை விட்டு வெளியேறிய நிலையில்...' - ஆடம் ஜாம்பா வெளியிட்டுள்ள 'பரபரப்பு' கருத்து...!
- 'எல்லாமே நல்லா தான் இருந்துச்சு...' எங்க 'பிரச்சனை' இருக்குன்னு நான் நினைக்குறேன்னா... 'வருத்தப்பட்ட மோர்கன்...' - இப்படி புலம்ப விட்டாங்களே...!
- 'உங்க டீம் ஏன் இன்னும் வெளங்காம இருக்குனு இப்போ புரியுதா'?.. கொல்கத்தா அணியின் பலவீனத்தை... வெளிச்சம் போட்டு காட்டிய கவாஸ்கர்!!
- ‘ஒரு காலத்துல எப்படி இருந்த டீம்’!.. KKR-ஐ காப்பாத்தணும்னா உடனே ‘அதை’ பண்ணுங்க.. செம கடுப்பில் ரசிகர்கள் வைக்கும் கோரிக்கை..!