கொரோனா பீதியால்... சிக்கலில் சென்னை சூப்பர் கிங்ஸ்!.. தீபக் சஹார் குறித்து சகோதரி பரபரப்பு கருத்து!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் தீபக் சாஹர், அன்பு மற்றும் பிரார்த்தனையால் முன்பை விட பல மடங்கு பலத்துடன் மீண்டு வருவார் என அவரது சகோதரி மல்தி சாஹர் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஆண்டின் ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நவம்பர் 8ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் பங்கேற்பதற்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் யுஏஇ சென்றுள்ளன. அவர்களுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த ஒரு பவுலர் மற்றும் உதவியாளர்கள் உட்பட மொத்தம் 12 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

இதனையடுத்து சிஎஸ்கே அணியில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர், பந்துவீச்சாளரான தீபக் சாஹர் என தெரியவந்துள்ளது. ஆனால், கொரோனா பாதிக்கப்பட்ட வீரரின் பெயரை பிசிசிஐ இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில், தீபக் சாஹரின் சகோதரி மல்தி சாஹர் தன்னுடைய இன்ஸ்டாவில், நீங்கள் ஒரு உண்மையான போர் வீரர், இருண்ட இரவுக்குப் பின் பிரகாசமான பகல் இருக்கிறது என அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்