'இந்த IPL-ல வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா'?.. சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்!.. இந்த நிலைமைக்கு காரணம் என்ன?.. பரபரப்பு பின்னணி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

2021 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் முக்கியமான வீரர் ஒருவருக்கு அணியில் வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

2021 ஐபிஎல் தொடரின் முதல் போட்டி பெங்களூர் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையில் நடக்கிறது.

அதற்கு அடுத்ததாக சென்னைக்கும் டெல்லிக்கு இடையில் முதல் போட்டி நடக்க உள்ளது. இதில் சிஎஸ்கே அணியில் ஆடப் போகும் வீரர்கள் யார் என்ற பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த போட்டிக்காக சிஎஸ்கே கடந்த ஒன்றரை மாதமாக பயிற்சி எடுத்து வருகின்றது.

இந்த நிலையில், சிஎஸ்கே அணியில் 4 வெளிநாட்டு வீரர்களில் சாம் கரன், மொயின் அலி, டு பிளசிஸ் ஆகியோர் ஆடுவது உறுதியாகிவிட்டது. இதற்கிடையே பிராவோ ஆடுவதும் உறுதியாகிவிட்டது. 

மீதம் உள்ள 8 பேரில் ஓப்பனிங் வீரர்களாக உத்தப்பா, ரூத்துராஜ் களமிறங்குவார்கள். அதன்பின் ரெய்னா, டு பிளசிஸ், தோனி களமிறங்குவார்கள். இன்னும் 2 வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். இதில் ஜடேஜா ஆடுவது உறுதியாகிவிட்டது. அதன்பின் ஷர்துல் அல்லது சாகரில் ஒருவர் தேர்வு செய்யப்படுவர். 

ஸ்பின்னை பொறுத்தவரை ஜடேஜா, மொயின் அலி ஆகியோர் உள்ளனர். பாஸ்ட் பவுலிங்கிற்கு ஷர்துல் (அல்லது சாகர்), பிராவோ, சாம் கரன் ஆகியோர் உள்ளனர். ரெய்னா கூடுதலாக இன்னொரு ஸ்பின் பவுலராக இருப்பார். இதனால், மிக முக்கியமான வீரரான அம்பதி ராயுடுவிற்கு வாய்ப்பு கிடைப்பது மிகவு கஷ்டம் என்று கருதப்படுகிறது. 

மேலும் ரெய்னா, உத்தப்பாவின் வருகையால் அம்பதி ராயுடு ஓரம்கட்டப்பட வாய்ப்புள்ளது என்றும் சொல்லப்படுகிறது. ராபின் உத்தப்பா முதல் தர போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறார். ஆனால், ராயுடு அப்படி ஆடவில்லை.

அதேபோல பிராவோவும் சில போட்டிகளில் ஆட வாய்ப்பு இல்லை என்கிறார்கள். பிராவோவிற்கு பதிலாக முழு பாஸ்ட் பவுலர் ஒருவர் களமிறங்க வாய்ப்புள்ளது. மேலும், கிருஷ்ணப்ப கவுதமும் ஆடும் லெவனில் இடம்பெறுவது கஷ்டம்தான் என்று கூறப்படுகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்