'இவங்க கையில 'சிஎஸ்கே'வ கொடுங்க'!.. இந்த வாட்டி கப் நமக்கு தான் பிகிலு!.. ஆனா இந்த ஆர்டர் ரொம்ப முக்கியம்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் 2021 டி20 தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான தனது ஆடும் லெவனை (Playing 11) முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி20 தொடரான ஐபிஎல் தொடரில் இதுவரை 13வது சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் ஏப்ரல் மாதம் 9ம் தேதி துவங்கி மே 30ம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் இந்த தொடர் துவங்க இன்னும் சில தினங்களே உள்ளதால் ஒவ்வொரு அணி வீரர்களும் இந்த தொடருக்காக மிக தீவிரமாக தயாராகி வருகின்றனர். வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் முன்னாள் வீரர்கள் சிலர் இந்த தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த போகும் வீரர்கள் யார் யார் என்பது குறித்தான தங்களது கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், எதிர்வரும் ஐபிஎல் டி.20 தொடர் குறித்து பல்வேறு விசயங்களை தனது யூடியூப் சேனல் பேசி வரும் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, இந்த வருட ஐபிஎல் தொடருக்கான சென்னை அணியின் தனது ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ள சென்னை அணிக்கான ஆடும் லெவனின் துவக்க வீரர்களாக கடந்த தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருத்துராஜ் கெய்க்வாட்டும், டூபிளசிஸும் இடம் பெற்றுள்ளனர்.

மிடில் ஆர்டரில் அம்பத்தி ராயூடு, சுரேஷ் ரெய்னா மற்றும் தோனி ஆகியோரை தேர்வு செய்துள்ள ஆகாஷ் சோப்ரா, ஆல் ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கர்ரான் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

பந்துவீச்சாளர்கள் வரிசையில் கரன் சர்மா, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் மற்றும் ஜோஸ் ஹசில்வுட்டை தேர்வு செய்துள்ள ஆகாஷ் சோப்ரா, 9 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்த கிருஷ்ணப்பா கவுதம் மற்றும் 6 கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட மொய்ன் அலி ஆகியோரை தனது அணியில் எடுக்கவில்லை. அதே போல் ஆகாஷ் சோப்ரா தனது அணியில் தேர்வு செய்துள்ள ஜாஸ் ஹசில்வுட் எதிர்வரும் ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ள சென்னை அணிக்கான தனது ஆடும் லெவன்:

ருத்துராஜ் கெய்க்வாட், டூபிளசிஸ், அம்பத்தி ராயூடு, சுரேஷ் ரெய்னா, தோனி (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, சாம் கர்ரான், கரண் சர்மா. ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், ஜாஸ் ஹசில்வுட்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்