Video: என்ன ஸ்பீடு...! 'ப்ராக்டிஸ் மேட்ச்ல மிடில் ஸ்டம்பு ரெண்டா உடைஞ்சு தெறிச்சிடுச்சு...' யார் இந்த ஃபாஸ்ட் பவுலர்...? - வைரலாகும் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்காக வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மும்பை இந்தியன்ஸ் அணியின் ஃபாஸ்ட் பவுலர் ட்ரெண்ட் போல்ட்  வீசிய பந்தில் ஸ்டம்ப் இரண்டாக உடைந்து சிதறியது.

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, இந்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவிருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன. இதனிடையே இந்தியாவில் போட்டியை நடத்துவதற்கான சூழல் இல்லாத நிலையில் பதின்மூன்றாவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19-ம் தேதி ஆரம்பித்து நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் ஐக்கிய அரபு அமீரகம் சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள நீயூசிலாந்து ஃபாஸ்ட் பவுலர் ட்ரெண்ட் போல்ட், பயிற்சியில் வீசிய ஒரு பந்து மிடில் ஸ்டம்பை இரண்டாக உடைத்து வெளியேறியது. இந்த வீடியோவை பதிவு செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, கிளீன் போல்ட் ட்ரெண்ட் வந்து வீட்டார் என தலைப்பிட்டு அந்த வீடியோவை தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் சிறந்த பந்து வீச்சாளரான இலங்கை வீரர் மலிங்கா சொந்த காரணங்களுக்காக 2020 ஐபிஎல்-ல் கலந்து கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார். இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்நிலையில் மலிங்காவுக்கு மாற்றாக அந்த அணியில் ட்ரெண்ட் போல்ட் இடம்பெற்றிருப்பது அந்த அணி ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்