'அவரு இந்திய அணிக்கு மட்டும் இல்ல... எனக்கும் தூணாக நின்னாரு'!.. புஜாராவின் கிரிக்கெட் கரியரை காப்பாற்றிய டிராவிட்!... ரகசியத்தை உடைத்து புஜாரா உருக்கம்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

7 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் டி20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் புஜாரா, தன்னுடைய பேட்டிங் திறமை காப்பாற்றப்பட்டது குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.

இந்திய அணியின் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என்ற ஒரு லேபிள் புஜாரா மீது பொருத்தப்பட்டு வருகிறது. ஆனால், அவரோ தற்போது வலைப்பயிற்சியில் முன்னங்காலை விலக்கிக் கொண்டு விளாசுவது, ஹை பேக்லிப்ட் பேட்டிங், இறங்கி வந்து தூக்கி அடிப்பது என்று தன் ஷாட் வகைகளை அதிகரித்துள்ளார்.

இந்நிலையில், டெஸ்ட் என்ற வடிவத்திலிருந்து டி20 வடிவத்துக்கு மாறிய தனக்கு ராகுல் டிராவிட் முன்பு கூறிய அறிவுரை இப்போதும் உதவிகரமாக இருக்கிறது என்று புஜாரா தெரிவித்துள்ளார்.

ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளத்துக்கு அவர் அளித்த பேட்டியில், "இவை அனைத்துமே அனுபவத்தின் மூலம் வருவதுதான். முன்பு டி20 ஆடும்போதெல்லாம் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் நம்மிடமிருந்து போய் விடும், நம் பழைய ஆட்டம் பாதிக்கும் என்று நான் பயப்படுவேன். ஐபிஎல் முடிந்தவுடன் உத்தி ரீதியான தவறுகள் தெரியவரும். ஆனால், இப்போது அந்தச் சந்தேகத்திலிருந்து விடுபட்டுள்ளேன்.

இப்போது அனுபவத்தின் மூலம், எனது இயல்பான பேட்டிங், என் பலம், என்னுடைய நிதான ஆட்டம் என்னை விட்டு போய்விடாது என்பதை உணர்ந்தேன்.

ராகுல் டிராவிட் முன்பு ஒரு முறை சொன்ன அறிவுரை இப்போதும் மேற்கோள் காட்டத்தக்கதுதான். அதை இப்போதும் குறிப்பிட விரும்புகிறேன். அவர் கூறியது என்னவெனில் பலவிதமான ஷாட்களை ஆடுவதால் உன்னுடைய இயல்பான திறமை போய்விடுமென்று நினைக்காதே என்றார்.

நான் மிகவும் முன்னதாகவே கிரிக்கெட் ஆட ஆரம்பித்து விட்டேன். முதல் தர கிரிக்கெட்டில் 2005-06-ல் அறிமுகமானேன். இப்போது கிரிக்கெட் ஆடத்தொடங்கி 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே, டி20 கிரிக்கெட்டில் ஆடுவேன், பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் தயார் செய்வேன், டெஸ்ட் கிரிக்கெட்டை என்னால் மறக்க முடியாது.

டி20 கிரிக்கெட்டிலிருந்து டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மாறுவது எனக்கு இனி பிரச்சினை இல்லை" என்று கூறியுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்