'பிட்ச்சா டா இது'?.. "அய்யோ!.. அரண்டு போயிட்டேன்"!.. 'பிரெட் லீ'யை அதிரவைத்த சென்னை மைதானம்!.. தெறிக்கும் பின்னணி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளின் போது சென்னையின் பிட்ச் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. தற்போது ஐபிஎல் போட்டிகளிலும் அதே பிரச்சினையை சென்னை பிட்ச்சில் எதிர்கொள்வதாக வீரர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஐபிஎல் 2021 தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி போராடி 131 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. அந்த அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் மட்டுமே சிறப்பான ரன்களை குவித்தனர். 

மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் பெவிலியனுக்கு திரும்பினர். நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த போட்டிக்கு சென்னையின் பிட்ச்மீது தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. அந்த அணி இதுவரை சென்னையில் விளையாடியுள்ள 5 போட்டிகளில் 2ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 

நேற்றைய போட்டியில் பனிப்பொழிவும் முக்கியமான பங்கை வகித்தது. பந்து ஸ்பின் ஆவதிலும் பிரச்சினை காணப்பட்டது. இந்த பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு, குறிப்பாக புதிய பேட்ஸ்மேன்களுக்கு அடித்து ஆடுவதில் பிரச்சினையை ஏற்படுத்தியது. இதனால் மும்பை வீரர்கள் அடுத்தடுத்து வீழ்ந்து குறைவான ஸ்கோரை அடித்தனர். இதனால் பஞ்சாப் அணி அதை எளிதாக சேஸ் செய்தது. 

இந்நிலையில், சென்னையின் பிட்ச் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக முன்னாள் ஆஸ்திரேலிய பௌலர் பிரெட் லீ தெரிவித்துள்ளார். பேட்ஸ்மேன்கள் அதிக ஸ்கோர்களை அடிக்க முடியாத அளவில் சென்னையின் பிட்ச் கடினமாக உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

பௌலர்களுக்கும் பவர்ப்ளேவில் வீசும் பந்துகள் ஸ்பின் ஆகாமல் மிகுந்த கடினமான பௌலிங் அனுபவத்தை கொடுத்துள்ளதகாவும் அவர் கூறியுள்ளார். இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் இதை சிறப்பாக பயன்படுத்தி நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்