'மனசெல்லாம் பாரமா இருக்கு!.. அத பார்த்து ஒடஞ்சு போயிட்டேன்'!.. பிரெட் லீ வீசும் பந்தின் வேகம் மட்டுமல்ல... அவரோட பாசமும் ரொம்ப அதிகம்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

யாரும் எதிர்பாராத விதமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிரெட் லீ திடீரென எடுத்த ஒரு முடிவு இந்திய ரசிகர்களை ஆனந்த கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. தினமும் இலட்சக்கணக்கான மக்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவிற்கு உதவுவதற்காக பல நாடுகள் முன்வந்துள்ளன. குறிப்பாக கொரனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஆக்சிஜனுக்கு இந்தியாவில் தட்டுப்பாடு நிலவுவதால், ஆக்சிஜன் வாங்குவதற்காக பலரும் நன்கொடை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ, தேவையான ஆக்சிஜன் வாங்குவதற்காக ஒரு பிட்காயினை நன்கொடையாக வழங்கியிருக்கிறார். செவ்வாய்க்கிழமை மாலையின் வர்த்தக நிலவரப்படி ஒரு பிட்காயின் என்பது இந்திய மதிப்பில் சுமார் நாற்பது இலட்சங்களாக இருக்கிறது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் பிரெட் லீ.

அதில், அவர் கூறியிருப்பதாவது, "இந்தியா எனது இரண்டாவது தாய்நாடு போன்றது. நான் கிரிக்கெட்டில் விளையாடிக் கொண்டிருந்த போதும், ஓய்வு பெற்ற பிறகும் இந்தியர்கள் என் மீது மிகுந்த அன்பு செலுத்தி வந்தனர். இது போன்ற பெருந்தொற்று சமயங்களில் அவர்கள் கஷ்டப்படுவது என் மனதிற்கு வருத்தத்தை அளிக்கிறது. இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு உதவுவதை என் வாழ்க்கையின் பாக்கியமாக நினைத்து, ஆக்சிஜன் பொருட்கள் வாங்குவதற்காக ஒரு பிட் காயினை (41 இலட்சம்) நன்கொடையாக வழங்குகிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

மேலும், அந்த பதிவில், "இது நாம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து மற்றவர்களுக்கு உதவக்கூடிய நேரம். ஆகையால், நேரத்தைக் கூட பார்க்காமல் கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காக போராடிக்கொண்டிருக்கும் முன் களப்பணியாளர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், மக்களை வீட்டிலேயே இருக்குமாறும், தேவைப்பட்டால் மட்டுமே வெளியே செல்லுமாறும், கைகளை நன்றாக கழுவுவதோடு மட்டுமல்லாமல் முகக் கவசம் அணியுமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டிருக்கிறார்.

அதுமட்டுமின்றி, கிரிக்கெட் வீரர்கள் நன்கொடை வழங்குவதை தொடங்கிவைத்த பேட் கம்மின்ஸிர்க்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார். இதற்கு முன்னதாக திங்கள் கிழமையன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான பேட் கம்மின்ஸ், பிஎம் கேர் ஃபண்டிற்கு 50,000 அமெரிக்க டாலர்கள் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்