விறுவிறுப்பாக நடந்த ஏலம்.. திடீரென சரிந்து விழுந்த ஏலதாரர்.. பதற்றம் அடைந்த கிரிக்கெட் ரசிகர்கள்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

15 ஆவது ஐபிஎல் தொடருக்கான ஐபிஎல் மெகா ஏலம், இன்று பெங்களூரில் ஆரம்பமான நிலையில், ஆரம்பித்தது முதலே மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

Advertising
>
Advertising

இதில், பல வீரர்கள் எதிர்பார்த்ததை விட, அதிக விலைக்கு ஏலம் போயினர். இந்திய அணியின் இளம் வீரர் ஷ்ரேயாஸ் ஐயரை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 12.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

அதே போல, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஏற்கனவே ஆடிய வீரர்களான பிராவோ மற்றும் உத்தப்பா ஆகியோரை மீண்டும் அணியில் எடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, இலங்கை வீரர் ஹசரங்காவை வைத்து, மிகவும் விறுவிறுப்பாக ஏலம் நடைபெற்று வந்தது. பல அணிகளும், அவரை அணியில் எடுக்க கடும் போட்டி போட்டது. 10 கோடி ரூபாய்க்கு மேல்; அவருக்கான தொகை உயர்ந்து கொண்டே போன நிலையில், திடீரென யாரும் எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

ஏலத்தில் ஈடுபட்டு வந்த ஏலதாரர் Hugh Edmeades, திடீரென அங்கேயே சரிந்து விழுந்தார். இதனால், அனைத்து அணியினரும் அதிர்ச்சி அடைந்தனர். அதே போல, லைவாக நிகழ்ச்சியை பார்த்து வந்த ரசிகர்களும் அதிகம் அதிர்ச்சி அடைந்தனர். ஐபிஎல் ஏலத்தில் இதுவரை நிகழாத சம்பவம் அரங்கேறியதால், ஒரு பதற்றமும் அங்கு நிலவியது. இந்நிலையில், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.

Hugh Edmeades சரிந்து  விழுந்த காரணத்தினால், ஐபிஎல் ஏலம் சிறிது நேரம் தடைபட்டுள்ளது. மிக விரைவில், மீண்டும் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

IPL AUCTION 2022, HUGH EDMEADES, IPL 2022, AUCTIONER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்