'விலை' போகாத வீரர்களை... ஏலக்கடைசியில்... கோடிகளை 'கொட்டிக்கொடுத்து' எடுத்த அணிகள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இன்றைய ஐபிஎல் ஏலம் பல பரபரப்புகள், திருப்பங்களுக்கு பஞ்சமில்லாமல் நடந்து முடிந்துள்ளது. அதிலும் ஏலத்தின் கடைசி நேர டுவிஸ்ட்டுகள் யாரும் எதிர்பாராதவையாக அமைந்துள்ளன. குறிப்பாக ஏலத்தின் ஆரம்பத்தில் விலைபோகாத அயல்நாட்டு வீரர்களை ஏல முடிவில் கோடிகளை கொட்டிக்கொடுத்து பிரபல அணிகள் வாங்கியுள்ளன.

உலகின் அபாயகரமான பந்துவீச்சாளர் என புகழப்படும் தென் ஆப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெயின் ஆரம்பத்தில் விலை போகவில்லை. ஆனால் ஏல முடிவில் பெங்களூர் அணி அவரை 2 கோடிகள் கொடுத்து எடுத்தது. இதேபோல ஆஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் முதலில் விலை போகவில்லை. ஸ்டெயின் போல இவரும் கடைசியில் 4.8 கோடிக்கு டெல்லி அணி எடுத்தது.

கடைசியாக ஆஸ்திரேலிய வீரர் ஆண்ட்ரூ டையை ஏல முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 1 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது. இதேபோல தமிழக வீரர் சாய் கிஷோரையும் ஆரம்பத்தில் எந்த அணியும் எடுக்கவில்லை. கடைசியாக சென்னை அணி அவரை அடிப்படை விலையான 20 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்