ஒரே அணிகளில் பரம எதிரிகள்... அந்த சம்பவத்தை எல்லாம் மறந்துருப்பாங்களா? இனி என்ன நடக்க போகுதோ
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபெங்களூரு: இன்று நடந்து வரும் ஐபிஎல் ஏலத்தில் பரம எதிரிகளான ஒரே அணியில் விளையாட இருப்பது பலரது புருவத்தை உயர்த்தி உள்ளது.
அஸ்வின் - பட்லர்
ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் இந்திய ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) உடன் INR 5 கோடிக்கு ஏலம் போனார். ஷிகர் தவான் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு விற்கப்பட்டதையடுத்து, அஸ்வின் இரண்டாவது ஆட்டக்காரராக ஏலம் போனார். டெல்லி கேபிடல்ஸ் மற்றும் RR அணிகள் 34 வயதான அஸ்வினை எடுக்க கடுமையான முயற்சியில் ஈடுபட்டன. பின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அஸ்வினை ஏலத்தில் எடுத்தது.
இதன் மூலம், அவர் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேட்டரான ஜோஸ் பட்லருடன் RR முகாமில் இணைய உள்ளார். 2019 IPL போட்டியில் ஜோஸ் பட்லரை மாங்கட் முறையில் அஸ்வின் பெயில்களை தட்டி விட்டு அவுட் ஆக்கியது சர்ச்சையானது.
இச்சம்பவத்தால் ரசிகர்கள், கிரிக்கெட் வல்லுனர்களில் இரு பிரிவு உருவானதால் கிரிக்கெட் விதி பற்றி விவாதங்கள் எழுந்தன. சிலர் இது விதிகளுக்கு உட்பட்டது என்று கூறி அஸ்வின் ஆதரிக்கும் போது, அவர் ஏன் அவ்வாறு செய்வதற்கு முன் எச்சரிக்கை கொடுக்கவில்லை என்று அஸ்வினுக்கு எதிராக கேள்வி எழுப்பினர்.
பட்லருக்கு ஆதரவாக ஆண்டர்சன் உள்ளிட்ட வீரர்கள் அஸ்வினுக்கு எதிராக சில செயல்களில் ஈடுபட்டனர்.
தீபக் ஹூடா - க்ருணால் பாண்டியா
கடந்த ஆண்டு, பரோடா கிரிக்கெட் அணி (பிசிஏ) சையத் முஷ்டாக் அலி டிராபிக்கு முன் பெரும் பின்னடைவை சந்தித்தது, ஆல்-ரவுண்டர் தீபக் ஹூடா பரோடா கேப்டன் க்ருனாலுடன் சண்டையிட்ட பிறகு பயோ-பபிளை விட்டு வெளியேறினார். BCA க்கு அனுப்பப்பட்ட ஒரு மின்னஞ்சலில், தீபக் ஹூடா க்ருனாலுக்கு எதிராக தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளை (கெட்ட வார்த்தையில் சக வீரர்களை திட்டுதல் உள்ளிட்ட) முன்வைத்தார். ஹூடாவுக்கு ஆதரவாக இர்பான் பதான் களமிறங்கினார். ஹூடா பரோடா அணியில் இருந்து வெளியேறினார்.
ஹூடா புதிய ஐபிஎல் உரிமையாளரான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு 5.75 கோடிக்கும், க்ருனால் ரூ.8.25 கோடிக்கும் ஏலத்தில் வாங்கப்பட்டனர். இந்நிலையில் நால்வரும் இப்போது கைகோர்த்து ஒரே அணிகளுக்காக விளையாடுவது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தி உள்ளது. இருவரும் ஒரே அணியில் எப்படிச் செயல்படுவார்கள் என்பதைப் பார்க்கும் உற்சாகத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அஸ்வின்' பெயர் சொன்னதும் சைலண்ட் ஆன 'சிஎஸ்கே'.. ஏமாந்த ரசிகர்கள்.. ஒரு வேளை இது தான் காரணமா இருக்குமோ?"
- போட்றா வெடிய.. மறுபடியும் சிஎஸ்கேவுக்கு வந்த ‘ஸ்டார்’ ப்ளேயர்.. ஃபேன்ஸ் ‘செம’ ஹேப்பி அண்ணாச்சி..!
- KKR-க்கு கேப்டன் கெடச்சிட்டாரு போலயே.. முட்டி மோதிய அணிகள்.. பெரிய விலைக்கு ‘இந்திய’ இளம் வீரரை எடுத்திருக்காங்க...!
- அஸ்வினை இந்த தடவை எந்த அணி ஏலத்துல எடுத்திருக்காங்கன்னு பாருங்க. டெல்லி கூட போட்டி போட்டு தட்டி தூக்கிய அணி..!
- ஓகோ.. தோனி அந்த டைம்ல தான் எல்லாத்தையும் சொல்லுவாரா..? சிஎஸ்கே சிஇஓ சொன்ன சீக்ரெட்..!
- IPL AUCTION: கோலாகலமாக தொடங்கி சூடு பிடித்த ஐபிஎல் ஏலம்! 10 அணிகளும் மும்முரம்... முழு தகவல்
- இரண்டே 'மேட்ச்' மூலம்.. ஒட்டு மொத்தமா திரும்பி பார்க்க வைத்த வீரர்.. "ஐபிஎல் ஏலம் களை கட்டப் போகுது"
- பொல்லார்டு, ஜடேஜாவை ஏலத்தில் எடுக்க பயன்படுத்தப்பட்ட சைலன்ட் டை பிரேக்கர் ரூல்..அப்படின்னா என்ன?
- ஐபிஎல் மெகா ஏலம் : 'சிஎஸ்கே' டீம்'ல இந்த 3 பேர் ஆடுனா செமயா இருக்கும்'ல.. சிவகார்த்திகேயன் போட்ட லிஸ்ட்.. வெயிட்டிங்கில் ரசிகர்கள்
- ஐபிஎல் அணிகளுக்கு வந்த குட் நியூஸ்.. அப்போ அந்த ‘நாட்டு’ ப்ளேயர்ஸை எடுக்க போட்டா போட்டி நடக்குமே..!