IPL 2022: ‘இந்த க்ருணால் 100% மேட்சை வின் பண்ணி கொடுப்பான்’.. ஏலத்துக்கு முன் பரபரப்பை கிளப்பிய பாண்ட்யா..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற சில நாட்களே உள்ள நிலையில் க்ருணால் பாண்ட்யா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

எல்லாரும் கேட்ட ஒரே கேள்வி.. ஏன் ரிஷப் பந்த் தொடக்க வீரராக விளையாடுனார்..? கேப்டன் ரோகித் விளக்கம்..!

ஐபிஎல் ஏலம்

ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்னும் ஒரு சில நாட்களில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் இணைக்கப்பட்டுள்ளது. அதனால் அனைத்து அணியில் உள்ள வீரர்களும் கலைக்கப்பட்டு மெகா ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது.

பெங்களூரு

வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் வைத்து இந்த மெகா ஏலம் நடைபெற உள்ளது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 590 வீரர்கள் பங்கேற்ற உள்ளனர். இந்த ஏலத்துக்கு முன்பாகவே ஒவ்வொரு அணியும், தங்கள் அணியில் ஏற்கனவே விளையாடிய 4 வீரர்களை தக்க வைத்துள்ளன.

பாண்ட்யா சகோதரர்கள்

இதில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் ஷர்மா, பும்ரா, பொல்லார்டு மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய 4 வீரர்களை தக்க வைத்துள்ளது. ஆனால் மும்பை இந்திய அணியில் நீண்ட காலமாக விளையாடிய பாண்டியா சகோதரர்களை அந்த அணி நிர்வாகம் தக்க வைக்கவில்லை. கடந்த 2016 முதல் 2021 ஆண்டு வரை மும்பை அணிக்காக ஹர்திக் பாண்ட்யா மற்றும் க்ருணால் பாண்ட்யா ஆகிய இருவரும் விளையாடி வந்துள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ்

இம்முறை மெகா ஏலம் வருவதால் வேறு வழியின்றி மும்பை இந்தியன்ஸ் அணி இருவரையும் விடுவித்தது. இதில் ஹர்திக் பாண்டியாவை ஏலத்துக்கு முன்பாகவே 15 கோடிகள் கொடுத்து புதிதாக இணைக்கப்பட்ட அகமதாபாத் அணி நிர்வாகம் அவரை வாங்கியது. மேலும் அணியின் கேப்டனாகவும் ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியிக்கு ‘குஜராத் டைட்டன்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது.

க்ருணால் பாண்ட்யா

இந்த நிலையில் ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்வது குறித்து க்ருணால் பாண்ட்யா கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘இந்த க்ருணால் பாண்ட்யா 100 சதவீதம் வெற்றிகளை பெற்று தருவான். இது ஒன்றும் ஓவர் கான்பிடென்ட் கிடையாது. நான் எப்போதும் என் மீது நம்பிக்கை வைத்துள்ளேன்’ என க்ருணால் பாண்ட்யா கூறியுள்ளார்.

தம்பி ஹர்திக் பாண்ட்யா

அப்போது சகோதரர் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாட விருப்பம் உள்ளதா என க்ருணால் பாண்ட்யாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘அவருக்கு (ஹர்திக் பாண்ட்யா) நான் தேவையா என எனக்கு தெரியாது. ஆனால் ஐபிஎல் ஏலம் வாயிலாக என்னை தேர்வு செய்யலாம். வேறு எந்த அணிக்காக விளையாட நான் ஒப்பந்தமானாலும் மகிழ்ச்சியே. ஹர்டிக் பாண்டியாவுக்கு அனைத்து தகுதியும் உள்ளது’ என க்ருணால் பாண்ட்யா கூறியுள்ளார். ஐபிஎல் ஏலம் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், க்ருணால் பாண்ட்யா கூறியது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

என்னது ‘அந்த’ டீம் தோனியை எடுக்க போட்டி போட்டாங்களா? இத்தனை நாளா இது தெரியாம போச்சே.. ரிச்சர்ட் மேட்லி பகிர்ந்த சீக்ரெட்..!

KRUNALPANDYA, IPL2022, IPL AUCTION, INDIANS ALL-ROUNDER, க்ருணால் பாண்ட்யா, ஐபிஎல்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்