'உங்க டீம்ல ஓப்பனிங்கே சரியில்லையே!.. 'இப்படி' மாத்தி ஆடுங்க... அது தான் சரியா வரும்'!.. பஞ்சாப் அணியின் செம்ம பலம் 'இது'... ரவுண்டு கட்டி அடிக்கலாம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா ஐபிஎல் டி.20 தொடருக்கான பஞ்சாப் அணியில் தனது ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் உள்ளூர் டி.20 தொடரான ஐபிஎல் தொடரில் இதுவரை 13வது சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் ஏப்ரல் மாதம் 9ம் தேதி துவங்கி மே 30ம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் இந்த தொடர் துவங்க இன்னும் சில தினங்களே உள்ளதால் ஒவ்வொரு அணி வீரர்களும் இந்த தொடருக்காக மிக தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் முன்னாள் வீரர்கள் சிலர் இந்த தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த போகும் வீரர்கள் யார் யார் என்பது குறித்தான தங்களது கணிப்புகளை ஓபனாக தெரிவித்து வருகின்றனர்.

அதே போல் ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் யார் யாருக்கு இடம் கொடுக்க வேண்டும் என்பது குறித்தும் அட்வைஸ் கொடுத்து வரும் முன்னாள் வீரர்கள், ஒவ்வொரு அணிக்குமான தங்களது ஆடும் லெவனையும் தேர்வு செய்து அறிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தனது யூடியூப் சேனல் மூலம் எதிர்வரும் ஐபிஎல் தொடர் குறித்து தொடர்ந்து பல்வேறு கருத்துகளை பேசி வரும் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா, இந்த வருட தொடருக்கான பஞ்சாப் அணியின் தனது ஆடும் லெவனை தேர்வு செய்து அறிவித்துள்ளார்.

கடந்த தொடரில் மாஸ் காட்டிய மயன்க் அகர்வால்–கே.எல் ராகுல் ஜோடியை தனது ஆடும் லெவனில் பிரித்துள்ள ஆகாஷ் சோப்ரா, இந்த வருட ஐபிஎல் தொடரில் கிரிஸ் கெய்லும், கே.எல் ராகுலும் பஞ்சாப் அணியின் துவக்க வீரர்களாக களமிறங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதே போல் மூன்றாவது இடத்தில் மாயன்க் அகர்வாலையும், நான்காவது இடத்தில் நிக்கோலஸ் பூரன் மற்றும் ஐந்தாவது இடத்தில் தீபக் ஹூடா ஆகியோரையும் தேர்வு செய்துள்ளார்.

ஆல் ரவுண்டர்கள் வரிசையில் மொய்ஸஸ் ஹெண்ட்ரிக்ஸை தேர்வு செய்துள்ள ஆகாஷ் சோப்ரா, 7வது இடத்தில் மந்தீப் சிங், ஷாருக் கான் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என தெரிவித்துள்ளார். அதே போல் பந்துவீச்சாளர்கள் வரிசையில் முருகன் அஸ்வின், முகமது ஷமி, ரவி பிஸ்னோய் மற்றும் ஜெய் ரிச்சர்ட்சன் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ள பஞ்சாப் அணியின் ஆடும் லெவன்:

கிரிஸ் கெய்ல், கே.எல் ராகுல், மாயன்க் அகர்வால், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, மொய்ஸஸ் ஹென்ரிக்ஸ், மந்தீப் சிங்/ஷாருக் கான்/ சர்பராஸ் கான், முருகன் அஸ்வின், ரவி பிஸ்னோய், முகமது ஷமி, ஜெய் ரிச்சர்ட்சன்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்