'சின்னப்பசங்க தான... இறங்கி செஞ்சிடாம்லனு நெனச்சீங்களா'!?.. 'விக்கெட் பத்திரம்'!!.. ஜாம்பவான்களை நடுங்க வைத்த 4 இளம் வீரர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இளம் வீரர்கள் 4 பேர் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் பெற்றுள்ளனர்.

ஐபிஎல் தொடர் கடந்த 9ம் தேதி முதல் தொடங்கி தற்போது வரை 4 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளன. அனைத்து ஆட்டங்களும் இளம் வீரர்களின் சிறப்பான செயல்பாட்டால் விறுவிறுப்பாக சென்றது.

இந்நிலையில், ஒவ்வொரு அணிக்கும் அதன் முக்கிய கட்டமான கடைசி ஓவர்களில் சர்வதேச போட்டிகளில் விளையாடாத 4 இந்திய இளம் வீரர்கள் கவனத்தை ஈர்த்துள்ளனர்.  

பெங்களூரு அணியை சேர்ந்த ஹர்ஷல் பட்டேல், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக செயல்பட்டு, தனது தொடக்க போட்டியிலேயே 5 விக்கெட்கள் எடுத்து அசத்தினார். இந்த போட்டியில் மும்பை அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்த நிலையில் முக்கிய வீரர்களான பொல்லார்ட், இஷான் கிஷன், ஹர்த்திக் பாண்டியா, க்ருணால் பாண்டியா, மார்கோ ஜான்சென் ஆகியோரை வீழ்த்தி ரன்னை கட்டுக்குள் கொண்டு வந்தார். 

டெல்லி அணி வீரரான ஆவேஷ் கான் சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் அடுத்தடுத்து 2 விக்கெட்களை சாய்தார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தோனியை டக் அவுட்டாக்கினார். அதே போல முன்னணி வீரர் டூப்ளசிஸையும் எல்பிடபுல்யூ முறையில் ஆவுட்டாக்கினார். மொத்தம் 4 ஓவர்கள் வீசிய அவர், 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். 

ராஜஸ்தான் அணி பவுலரான சேட்டன் சக்ரியா, பஞ்சாப் அணியின் டாப் ஆர்டரை உலுக்கிவிட்டார். குறிப்பாக ராகுல், மயங்க் அகர்வால், ஜெயி ரிச்சர்ட்சன் ஆகியோரது விக்கெட்களை எடுத்தார். மொத்தம் 4 ஓவர்கள் வீசிய இவர், 3 விக்கெட்ளை எடுத்து 31 ரன்களை விட்டுக்கொடுத்தார். 

நேற்று நடைபெற்ற பஞ்சாப் - ராஜஸ்தான் போட்டியில் சஞ்சு சாம்சன், பஞ்சாப் அணிக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தார். மேலும், இந்த போட்டியில் 4 ஓவர்கள் விசிய பஞ்சாப் அணியின் இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். அதிலும் கடைசி ஓவரில் சாம்சனை லாவகமாக அவுட்டாக்கி பஞ்சாப் அணியின் த்ரில் வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்