"இந்தா வந்துடுச்சுல".. வெளியான 2023 ஐபிஎல் அட்டவணை.. முதல் மேட்சில் ஆடும் CSK.. எதிர்த்து ஆடுறது எந்த டீம் தெரியுமா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவில் ஆண்டு தோறும் நடைபெறும் ஐபிஎல் டி 20 லீக் தொடர் போட்டிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் உலக அளவில் உள்ளனர்.

Advertising
>
Advertising

                             Images are subject to © copyright to their respective owners.

Also Read | முதல் டெஸ்ட்ல ஜடேஜா, 2 ஆவது Test -ல அஸ்வின்.. "ஒரே ஓவரில் மாயாஜாலம் செய்த சூழல்".. போட்டியையே மாத்திட்டாரே!!

ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் போட்டிகள் குறித்த அறிவிப்புகள் வரும் போதே இந்த தொடரை எதிர்நோக்கியும் ரசிகர்கள் காத்து வருவார்கள். இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளின் கிரிக்கெட் வீரர்களும் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்று அணிகளாக பிரிந்து ஆடுவதால் கிரிக்கெட் ரசிகர்களின் ஃபேவரைட் தொடராகவும் ஐபிஎல் உள்ளது.

அதே போல, கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய இரு அணிகள் புதிதாக களமிறங்கி இருந்தது. இதில், தாங்கள் களமிறங்கிய முதல் ஐபிஎல் சீசனிலேயே கோப்பையை வென்று அசத்தி இருந்தது ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி. தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்க உள்ளது. முன்னதாக, ஐபிஎல் மினி ஏலமும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றிருந்தது.

Images are subject to © copyright to their respective owners.

இதற்கடுத்து ஐபிஎல் 2023 தொடர் ஆரம்பமாவது குறித்த அதிகாரபூர்வஅறிவிப்பையும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வந்தனர். அந்த வகையில், தற்போது 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 31 ஆம் தேதி ஐபிஎல் தொடர் ஆரம்பமாகி, மே 28 ஆம் தேதியன்று முடிவடைகிறது.

மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெறவுள்ள சூழலில், ஒவ்வொரு ஐபிஎல் அணிகளும் 7 போட்டிகளை தங்களின் ஹோம் கிரவுண்டிலும், மீதமுள்ள 7 போட்டிகளை மற்ற மைதானங்களில் ஆடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

மேலும் இந்த சீசனுக்கான அறிமுக போட்டி, மார்ச் 31 ஆம் தேதியன்று தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையே அகமதாபாத் மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது. தொடர்ந்து ஏப்ரல் 01 ஆம் தேதியன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளும் மோதுகின்றன.

Images are subject to © copyright to their respective owners.

அதே போல, மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், லக்னோ மற்றும் டெல்லி ஆகிய அணிகள், க்ரூப் A வில் இடம்பெற்றுள்ளது. சென்னை, பெங்களூர், குஜராத், பஞ்சாப் மற்றும் ஹைதராபா அதே போல, மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், லக்னோ மற்றும் டெல்லி ஆகிய அணிகள், க்ரூப் A வில் இடம்பெற்றுள்ளது. சென்னை, பெங்களூர், குஜராத், பஞ்சாப் மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் க்ரூப் B ல் இடம்பெற்றுள்ளது.

Also Read | வழுக்கையால் பறிபோன வேலை?.. ஷாக்ல இருந்த மனுஷனுக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டிய லட்ச ரூபாய்!!

CRICKET, IPL 2023, IPL 2023 SCHEDULE, CSK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்