IPL 2023: அந்த இரண்டு சிட்டிக்கு டீமே இல்லை.. ஆனால் ஊர் கிரவுண்டுல மேட்ச் இருக்கு 😅.. செம்ம ட்விஸ்ட் கொடுத்த IPL அட்டவணை!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடப்பாண்டில் ஐபிஎல் டி 20 லீக் தொடர் போட்டிகளுக்கான அட்டவணை & மைதான விவரங்கள் வெளியாகி உள்ளன.
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து பல கிரிக்கெட் வீரர்களும் இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்பதால் இந்த தொடருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய இரு அணிகள் புதிதாக களமிறங்கி இருந்தன.
களமிறங்கிய முதல் ஐபிஎல் சீசனிலேயே கோப்பையை வென்று அசத்தி இருந்தது ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி. தொடர்ந்து, 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. முன்னதாக, ஐபிஎல் மினி ஏலமும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கடுத்து ஐபிஎல் 2023 தொடர் ஆரம்பமாவது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பையும் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர். அந்த வகையில், தற்போது 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, மார்ச் 31 ஆம் தேதி ஐபிஎல் தொடர் ஆரம்பமாகி, மே 28 ஆம் தேதியன்று முடிவடைகிறது. மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெறவுள்ள சூழலில், ஒவ்வொரு ஐபிஎல் அணிகளும் 7 போட்டிகளை தங்களின் ஹோம் கிரவுண்டிலும், மீதமுள்ள 7 போட்டிகளை மற்ற மைதானங்களில் ஆடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மொஹாலி, லக்னோ, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை, கவுகாத்தி மற்றும் தரம்சாலா ஆகிய 12 நகரங்களில் உள்ள மைதானங்களில் ஐபிஎல் 2023 போட்டிகள் நடைபெறுகின்றன.
52 நாட்களில் 12 மைதானங்களில் மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி நகரில் முதல்முறையாக ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளது. கவுகாத்தி நகரம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஜெய்ப்பூருடன் சேர்தது ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு இரண்டு போட்டிகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இமாச்சலப் பிரதேசம் தரம்சாலா நகரில் உள்ள மைதானத்தில் வழக்கம் போல போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் XI அணிக்கு இந்த மைதானம் மொகாலியுடன் சேர்ந்து ஒதுக்கப்பட்டுள்ளது.
கவுகாத்தி மற்றும் தரம்சாலா நகருக்கு ஐபிஎல் அணிகள் இல்லையென்றாலும் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஐபிஎல் அணிகள் இல்லாத இந்தூர், ராய்ப்பூர், தரம்சாலா, ராஞ்சி நகர மைதானங்களில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
மற்ற செய்திகள்
நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்.. ஜடேஜாவின் மேஜிக் ஸ்பின்.. திகைச்சு நின்ன பேட்ஸ்மேன்.. வீடியோ..!
தொடர்புடைய செய்திகள்
- “விளையாடலைனாலும் பரவால்ல.. எங்க பக்கத்துல இருங்க”.. ரிஷப் பண்ட்-க்கு உருக்கமான கோரிக்கை வைத்த ரிக்கி பாண்டிங்..!
- 17.5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸால் வாங்கப்பட்ட கேமரூன் க்ரீன்.. டெஸ்ட் போட்டியில் காயம்.. ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத சூழ்நிலை?
- Kaviya Maran : ஐபிஎல் ஏலத்தில் தனியொரு சிங்கப்பெண்ணாக கவனம் ஈர்த்த காவ்யா மாறன்.!! கலக்கிட்டாங்கப்பா.. IPL 2023
- IPL 2023 : "சார் இந்த தடவ சென்னை".. ரசிகர் கேட்ட கேள்விக்கு தோனி சொன்ன பதில்.. வைரல் வீடியோ!!
- IPL போட்டிகளில் இருந்து ஓய்வு.. விடைபெற்றார் CSK ஆல் ரவுண்டர் பிராவோ! சகாப்தம் முடிந்தது
- "இனிமே அப்டி இருக்காது".. Retire ஆன பொல்லார்ட்.. CSK போட்ட நெகிழ்ச்சி கமெண்ட்!!
- லிஸ்ட் வெளியானதும் ஜடேஜா பகிர்ந்த ட்வீட்.. அந்த 3 வார்த்தை கேப்ஷன் தான் 'செம' வைரல்!! IPL 2023
- ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த பொல்லார்ட்.. மும்பை அணிக்காக புது ரூட்டில் கொடுக்க போகும் என்ட்ரி!!
- IPL 2023 ஏலம்.. எங்கே, எப்போ நடக்க போகுது?.. வெளியான தகவல்.. உற்சாகத்தில் ரசிகர்கள்..!
- "ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்கணும்".. ஏபி டிவில்லியர்ஸ் உருக்கம்.. கலங்கிப்போன ரசிகர்கள்.. முழுவிபரம்..!