அம்மாடியோவ்..! உம்ரான் மாலிக் தோனிக்கு இவ்ளோ வேகத்துல பந்து வீசுனாரா..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனிக்கு ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிவேகமாக பந்துவீசி அசத்தியுள்ளார்.

Advertising
>
Advertising

ஐபிஎல் தொடரின் 46-வது லீக் போட்டி நேற்று புனே மைதானத்தில் நடைபெற்றது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 99 ரன்களும், டேவான் கான்வே 85 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. அதனால் 13 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது. இதில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இப்போட்டியில் 154 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் அசத்தியுள்ளார். இப்போட்டியின் 10-வது ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு முதலில் இந்த வேகத்தில் வீசினார். அவர் அதை பவுண்டரிக்கு விளாசினார்.

இதனைத் தொடர்ந்து 19-வது ஓவரை வீசிய உம்ரான் மாலிக், 154 கிலோ மீட்டர் வேகத்தில் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனிக்கு யார்க்கர் வீசினார். இந்த பந்தை லாவகமாக எதிர்கொண்ட தோனி ஒரு ரன் மட்டும் எடுத்தார். இதனால் காஷ்மீரை சேர்ந்த 24 வயது இளம் வீரர் உம்ரான் மாலிக்கின் பந்துவீச்சை கிரிக்கெட் ஜாம்பவான்கள் தொடர்ந்து பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://www.behindwoods.com/bgm8/

MSDHONI, IPL, CSK, SRH, UMRANMALIK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்