"அவ்ளோ சீக்கிரம் போயிட மாட்டேன்.." மீண்டும் IPL -ல் ரெய்னா என்ட்ரி.. CSK மேட்ச் வர்றப்போ அள்ளப் போகுது..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

15 ஆவது ஐபிஎல் தொடர், வரும் மார்ச் 26 ஆம் தேதியன்று, ஆரம்பமாகிறது. இதன் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

Advertising
>
Advertising

உக்ரைனுக்கு ஆதரவாக ஒன்னுகூடிய லட்சக்கணக்கான ஹேக்கர்ஸ்.. கொடுக்கப்பட்ட ‘அசைன்மென்ட்’ என்ன..? பதற்றத்தில் ரஷ்யா..!

மேலும், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய இரண்டு புதிய அணிகளும் இந்த முறை ஐபிஎல் தொடரில் பங்கேற்கின்றன.

இதன் காரணமாக, இரண்டு குழுக்கள் பிரிக்கப்பட்டு (ஒரு குழுவில் தலா ஐந்து அணிகள்) லீக் போட்டிகள் நடத்தப்படவுள்ளது.

ரசிகர்கள் அதிர்ச்சி

ஐபிஎல் போட்டிகள் நெருங்கி வருவதால், அனைத்து அணிகளும் தற்போதே பயிற்சியினை ஆரம்பித்து, தீவிரமாக தயாராகி வருகிறது. முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம், மெகா ஏலம் நடந்த போது, ஐபிஎல் தொடரின் நட்சத்திர வீரர் ஒருவரை எந்த அணிகளும் எடுக்காமல் போனது, ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

ரெய்னாவுக்கு வந்த நிலை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, சுமார் 10 சீசன்களுக்கு மேல் ஆடியுள்ள சுரேஷ் ரெய்னாவை, எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்க முன் வரவில்லை. இதனால், அவர் 'Unsold' என அறிவிக்கப்பட்டார். Mr. IPL என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவின் நிலையை பார்த்து, ரசிகர்கள் அதிகம் மன வேதனை அடைந்தனர். இது பற்றி, சமூக வலைத்தளங்களில் கருத்தினையும் பதிவிட்டு வந்தனர்.

ரெய்னாவை எடுங்க

தொடர்ந்து, குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து ஜேசன் ராய் விலகிய போது, அவருக்கு பதிலாக ரெய்னாவை எடுங்கள் என்றும், ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து, டிரெண்ட் செய்திருந்தனர். இன்னும் ஒரு படி  மேலே போய், ரெய்னாவுக்கு குஜராத் ஜெர்சி போட்ட எடிட்டிங் புகைப்படங்களையும் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வந்தனர்.

மீண்டும் வரும் சின்ன தல

ஆனால், குஜராத் அணி ஜேசன் ராய்க்கு பதிலாக, ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் குர்பாஜை தேர்வு செய்தார்கள். இதனால், ரெய்னா ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாது என்பது ஏறக்குறைய உறுதி ஆனது. இந்நிலையில், ரெய்னா ஐபிஎல் தொடரில் களமிறங்கவுள்ளது பற்றி, அசத்தல் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஐபிஎல் வர்ணனை

ஐபிஎல் தொடரின் வர்ணனையில், சுரேஷ் ரெய்னா ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், ரெய்னாவுடன் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் பல ஆண்டுகளுக்கு பிறகு, வர்ணனையில் ஈடுபடுவார் என்றும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கிறது.

இருவரும், ஐபிஎல் போட்டிகளின் ஹிந்தி வர்ணனையில் ஈடுபடுவார்கள் என்றும் கூறப்பட்டு வரும் நிலையில், சிஎஸ்கே போட்டியின் போது, ரெய்னாவின் வர்ணனையை கேட்கவும், ஐபிஎல் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.

வேறலெவல்! சென்னை டூ பெங்களூருக்கு 25 நிமிஷத்துல போலாம்.. எப்படி?.. அசத்திய தமிழக மாணவர்கள்..

SURESH RAINA, COMMENTARY TEAM SOURCES, IPL, IPL2022, CSK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்