VIDEO: ‘ப்பா.. என்னா டைவ்’.. பெங்களூரு அணிக்கு செம ‘ஷாக்’ கொடுத்த தமிழக வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸை பஞ்சாப் அணி வீரர் ஷாருக்கான் கேட்ச் பிடித்து அவுட்டாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

ஐபிஎல் தொடரின் 3-வது லீக் போட்டி நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இதில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், டு பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 205 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக டு பிளசிஸ் 88 ரன்களும், விராட் கோலி 41 ரன்களும், தினேஷ் கார்த்திக் 32 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். இந்த ஜோடி ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. இதில் ஷிகர் தவான் 43 ரன்களும், மயங்க அகர்வால் 32 ரன்களும் எடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பானுகா ராஜபக்ச அதிரடியாக விளையாடி 43 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 19 ரன்களில் வெளியேற, அவரைத் தொடர்ந்து ராஜ் பவா டக் அவுட்டாகி வெளியேறினார். இந்த சமயத்தில் ஜோடி சேர்ந்த ஷாருக்கான் மற்றும் ஓடியன் ஸ்மித் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தனர். அதனால் 19 ஓவர்கள் முடிவில் என 208 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. இதில் ஷாருக்கான் 20 பந்துகளில் 24 ரன்களும், ஓடியன் ஸ்மித் 8 பந்துகளில் 25 ரன்களும் எடுத்தனர்.

இந்த நிலையில் போட்டியின் முதல் இன்னிங்சில் பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளசிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருந்தார். இது பஞ்சாப் அணிக்கும் பெரும் தலைவலியாக இருந்தது. அதனால் அவரை அவுட்டாக பல முயற்சிகளை மேற்கொண்டனர். அப்போது அர்ஷ்தீப் சிங் வீசிய ஓவரில் டு பிளசிஸ் அடித்த பந்தை தமிழக வீரரான ஷாருக்கான் டைவ் அடித்து கேட்ச் பிடித்தார். இது போட்டியில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

RCB, SHARUKHKHAN, FAFDUPLESSIS, PBKS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்