‘நம்ம டு பிளசிஸா இது’.. ப்ராக்டீஸ் மேட்சே வெறித்தனமா இருக்கே.. RCB வெளியிட்ட தெறி வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பெங்களூரு அணியின் பயிற்சி ஆட்டத்தின் போதும் கேப்டன் டு பிளசிஸ் அதிரடியாக விளையாடிய வீடியோ இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

Advertising
>
Advertising

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் நாளை (26.03.2022) முதல் தொடங்க உள்ளது. இதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த ஆண்டு முதல் லக்னோ, குஜராத் ஆகிய 2 புதிய அணிகள் இணைந்துள்ளன. அதனால் அனைத்து அணியிலுள்ள வீரர்களும் கலைக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் ஐபிஎல் ஏலம் நடைபெற்றது.

இந்த ஏலத்தில் ஏற்கனவே ஒரு அணியில் விளையாடிய வீரர்கள், மற்ற அணிகளுக்கு மாறியுள்ளனர். அதில் குறிப்பாக சிஎஸ்கே அணியில் நீண்ட காலமாக விளையாடிய தென் ஆப்பிரிக்கா வீரர் டு பிளசிஸ் பெங்களூரு அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். தற்போது அந்த அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் பெங்களூரு அணி வீரர்களுக்கு இடையேயான பயிற்சி போட்டி நடைபெற்றது. அதில் டு பிளசிஸ் சிக்சர், பவுண்டரி விளாசி 40 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். இந்த வீடியோவை பெங்களூர் அணி தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. இந்த பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட ப்ளேயிங் 11-ல் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

RCB, IPL, FAFDUPLESSIS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்