சர்ச்சையான தோனி நடிச்ச ஐபிஎல் விளம்பரம்.. மத்திய ஒளிபரப்பு துறை அதிரடி நடவடிக்கை..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தோனி நடித்த ஐபிஎல் விளம்பரத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. ஐபிஎல் வரலாற்றில் இதுபோல் சிஎஸ்கே அணி தோல்வி பெறுவது இதுவே முதல்முறை. இது அந்த அணியின் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி புதிய சிக்கல் உருவாகியுள்ளது. அதாவது, ஐபிஎல் தொடருக்காக தோனி விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார். அதில், பஸ் டிரைவரான தோனி, சாலையில் திடீரென பேருந்தை நிறுத்திவிட்டு, ஐபிஎல் தொடரை பார்ப்பது போல் காட்டப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பின்னர் பொதுமக்களும் ஒன்று சேர்ந்து ஐபிஎல் போட்டியை காண்பது போல் காட்டப்பட்டுள்ளது.

இதனை பார்த்த நுகர்வோர் சங்கம் (CUTS), மத்திய ஒளிபரப்பு துறையில் வழக்குப்பதிவு செய்தது. அதில் சாலை விதிமீறல், போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை தோனி நடித்த விளம்பரம் ஊக்குவிப்பது போன்று உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதை விசாரித்த மத்திய ஒளிபரப்பு துறை, சம்மந்தபட்ட விளம்பரத்தை மாற்றி அமைக்க வேண்டும், அல்லது அனைத்து சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் இருந்தும் வரும் ஏப்ரல் 20-ம் தேதிக்குள் நீக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்