KKR-க்கு கேப்டன் கெடச்சிட்டாரு போலயே.. முட்டி மோதிய அணிகள்.. பெரிய விலைக்கு ‘இந்திய’ இளம் வீரரை எடுத்திருக்காங்க...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் பெங்களூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Advertising
>
Advertising

ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் இன்று (12.02.2022) பெங்களூரில் நடைபெறுகிறது. ஏற்கெனவே இருக்கும் 8 அணிகளுடன் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன. அதனால் அனைத்து அணியில் உள்ள வீரர்களும் கலைக்கப்பட்டு, புதிதாக வீரர்கள் தேர்வு நடைபெறுகிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயருக்கு 2 கோடி அடிப்படையாகும் ஏலம் விடப்பட்டது. அப்போது அனைத்து அணிகளும் இவரை ஏலத்தில் எடுக்க போட்டி போட்டன. மும்பை, ஆர்சிபி, கொல்கத்தா உள்ளிட்ட அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.

இறுதியாக கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 12.25 கோடி ரூபாய்க்கு ஸ்ரேயாஸ் ஐயரை ஏலத்தில் எடுத்தது. முன்னதாக கேகேஆர் அணி கேப்டன் இயான் மோர்கனை விடுவித்தது. அதனால் தற்போதைக்கு கேகேஆர் அணி கேப்டன் இல்லாமல் உள்ளது.

இந்த சூழலில் ஸ்ரேயாஸ் ஐயரை ஏலத்தில் எடுத்துள்ளதால், இவரே கொல்கத்தா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இவர் ஏற்கனவே டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

IPL, KKR, SHREYAS IYER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்