சிஎஸ்கேவில் விளையாட ஆசைப்பட்ட வீரரை நேக்கா தட்டி தூக்கிய கம்பீர்.. இது நம்ம லிஸ்டலயே இல்லயே..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தோனியின் கேப்டன்ஷியில் விளையாட ஆசைப்பட்ட வீரரை போட்டி போட்டு லக்னோ அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

Advertising
>
Advertising

பெங்களூரில் ஐபிஎல் 15-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானை முதல் வீரராக பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. இதனை அடுத்து இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

இந்த நிலையில் இளம் வீரர் தீபக் கூடாவின் பெயர் ஏலத்தில் விடப்பட்டது. அப்போது சிஎஸ்கே அணி அவரை ஏலத்தில் எடுக்க முயன்றது. உடனே மும்பை இந்தியன்ஸ் அணியும், புதிதாக இணைந்துள்ள லக்னோ அணியும் போட்டி போட்டன. இடையில் மும்பை அணி ஏலம் கேட்பதை நிறுத்திக் கொண்டது. ஆனால் லக்னோ அணி தொடர்ந்து சிஎஸ்கே அணியுடன் போட்டி போட்டது. இறுதியாக 5.75 கோடி ரூபாய்க்கும் லக்னோ அணி தீபக் கூடாவை ஏலத்தில் எடுத்தது.

முன்னதாக தீபக் கூடா, சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியின் கேப்டன்சியின் கீழ் விளையாட விருப்பம் உள்ளதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடினார். அப்போது கூறிய அவர், விராட் கோலி அல்லது தோனியின் கையால் என் அறிமுக தொப்பியை வாங்க வேண்டும் என நீண்ட நாள் கனவு கண்டதாக உருக்கமாக தெரிவித்திருந்தார்.

அதனால் சிஎஸ்கே அணி இவரை எடுக்கும் என ரசிகர்களும் எதிர்பார்த்தனர். ஆனால் லக்னோ அணி அவரை ஏலத்தில் தட்டிச்சென்றது. லக்னோ அணிக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

CSK, LSG, IPLAUCTION, DEEPAKHOODA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்