“தோனி எப்போ பேட்டிங் பண்ண வந்தாலும் அந்த பயம் வந்திடும்”.. போட்டி முடிந்ததும் KKR கேப்டன் சொன்ன விஷயம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்து போட்டி முடிந்த பின் ஸ்ரேயாஸ் ஐயர் பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடர் 15-வது சீசனின் முதல் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின.
முன்னதாக சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து திடீரென தோனி விலகினார். இதனை அடுத்து அந்த அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் புது கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் அப்போட்டி ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இதில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் தோனி 50 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த நிலையில் போட்டி முடிந்த பின் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், ‘தோனி எப்போது பேட்டிங் செய்தாலும் எனக்கு ஒருவித பயம் இருந்துகொண்டே இருக்கும் .ஏனென்றால் எந்த நேரத்திலும் போட்டியின் போக்கை மாற்றும் திறன் கொண்டவர் தோனி. அதுமட்டுமல்லாமல் மைதானத்தில் சற்று பனிப்பொழிவு இருந்தது. அதனால் பந்தை நன்றாக பிடிக்க முடியவில்லை. கொல்கத்தா அணிக்கு புதிய கேப்டனாக பொறுப்பேற்று விளையாடுவது மகிழ்ச்சி. என்னை நம்பி கொல்கத்தா அணி நிர்வாகம் மிகப்பெரிய ஒரு பொறுப்பை கொடுத்துள்ளது. இந்த வெற்றியை அப்படியே கொண்டு செல்ல விரும்புகிறேன்’ என அவர் கூறியுள்ளார்
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பந்து ஸ்டம்பில் பட்டும் அவுட் கிடையாது.. அதிர்ஷ்டத்தால் தப்பிய சிஎஸ்கே வீரர்.. எப்படி தெரியுமா..?
- "என்னா ஸ்பீடு.." உத்தப்பாவை திணறடித்த KKR வீரர்.. தோனியுடன் ஒப்பிட்டு பாராட்டிய 'சச்சின்'
- "பழைய தல'ய பாத்துட்டோம்.." 2 வருஷத்துக்கு அப்புறம் தோனி செய்த சம்பவம்.. மிரண்டு போன கிரிக்கெட் ஜாம்பவான்..
- "நான் இப்போ அங்க இருந்துருக்கணும்.." சிஎஸ்கே மேட்ச் முன்பு உருகிய ரெய்னா.. பாத்த ஃபேன்ஸ் பாவம்யா
- "ஐபிஎல் கப்போட வாங்க தம்பி.." இந்திய வீரருக்கு ஸ்பெஷல் வாழ்த்து சொன்ன 'WWE' நட்சத்திரம்.. பின்னணி என்ன??
- எல்லை மீறிய பிராங்க்.. கடுப்பான சஞ்சு சாம்சன்.. அதிரடி முடிவெடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி..
- ப்ராக்டீஸ்ல தோனியை பார்த்ததும் வேகமாக வந்த கோலி.. ரசிகர்களை நெகிழவைத்த வீடியோ..!
- IPL 2022: இந்த சீசனில் ரசிகர்கள் மிஸ் செய்யப்போகும் 5 விஷயங்கள்!
- "சிஎஸ்கே'வ விட்டு கெளம்ப பிளான் போட்ட ஜடேஜா?.." முன்னாள் வீரர் சொன்ன விஷயம்.. என்னங்க சொல்றீங்க?
- “அவர் ஒரு தடவை கூட டி20 டீமுக்கு கேப்டன்ஷி பண்ணதில்ல”.. ஜடேஜாவுக்கு இருக்கும் சிக்கல்.. முன்னாள் சிஎஸ்கே வீரர் கருத்து..!