“என் பேரு கடைசியா வந்ததும் பதட்டமாகிட்டேன்”.. நல்லவேளை ‘மும்பை’ என்னை ஏலத்துல எடுத்துட்டாங்க.. இளம் வீரர் உருக்கம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் ஏலத்தில் தன்னை எடுத்தது குறித்து ஜெயதேவ் உனத்கட் பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

ஐபிஎல் தொடர் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணி சற்று சறுக்கலை சந்தித்தது. அதனால் வலுவான அணியைக் கட்டமைக்க மும்பை அணி முயற்சி மேற்கொண்டது. அதன்படி சமீபத்தில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் திறமையான பல வீரர்களை ஏலத்தில் எடுத்தது.

அந்த வகையில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜெயதேவ் உனட்கட்டை ரூ. 1.30 கோடி ரூபாய்க்கு மும்பை அணி ஏலத்தில் எடுத்தது. இதுகுறித்து ஜெய்தேவ் உனத்கட் தற்போது பகிர்ந்துள்ளார். அதில், ‘இந்த ஐபிஎல் சீசனை நான் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறேன். ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வரும் மும்பை அணியில் இப்போது நானும் இருக்கிறேன் என்பது மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஏலத்தின் போது வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் என் பெயர் கடைசியாக வந்ததும் கொஞ்சம் பதட்டம் அடைந்தேன். ஆனால் மும்பை அணியால் நான் வாங்கப்பட்டதும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

என் சிறு வயது முதலே ரோல் மாடலாக இருந்த ஷேன் பான்ட் மற்றும் ஜாகிர் கான் ஆகிய இருவருடன் இணைந்து வேலை பார்க்க உள்ளேன். அதேபோல் வேகப்பந்து வீச்சாளரும் பும்ராவுடன் இணைந்து பந்து வீசுவது கூடுதல் போனஸ்’ என ஜெயதேவ் உனத்கட் தெரிவித்துள்ளார்.

கடந்த 2010-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமானஜெயதேவ் உனத்கட்,  இதுவரை 86 போட்டிகளில் விளையாடி 85 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுவரை கொல்கத்தா, பெங்களூரு, டெல்லி, புனே மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்காக இவர் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

IPL, MUMBAI-INDIANS, JAYDEVUNADKAT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்