"கொஞ்ச நாள் முன்னாடி கோலி கிட்ட பேசுனேன்.. அப்போ அவர் சொன்ன ஒரு விஷயம்".. சீக்ரெட்டை உடைத்த இர்ஃபான்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பின் விராட் கோலி கூறிய விஷயத்தை இர்பான் பதான் பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் வரும் 26-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்த முறை 2 புதிய அணிகள் இணைந்துள்ளதால் மொத்தம் 10 அணிகள் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் கோப்பையை வெல்ல முனைப்பு காட்டும் என்பதால் இந்த தடவை ஐபிஎல் போட்டிகள் சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகி உள்ளதால் அழுத்தங்கள் எதுவுமில்லாமல் விளையாட உள்ளார். தற்போது பெங்களூரு அணிக்கு தென் ஆப்பிரிக்க வீரர் டு பிளசிஸ் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இதுகுறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான், ‘நான் சமீபத்தில் கோலியுடன் பேசினேன். அப்போது அவர் என்னிடம் அழுத்தம் திருத்தமாக கூறிய விஷயம் என்னவென்றால், இனி கேப்டன்சி விஷயத்தில் தலையிட மாட்டேன், எனது போக்கில் சுதந்திரமாக பேட்டிங் செய்வேன் எனக் கூறினார்.

அதற்காக பேட்டிங் மட்டுமே என் பணி என இருந்து விடமாட்டேன். ஆர்சிபி அணிக்கு புதிதாக கேப்டனாக பொறுப்பேற்றுள்ள  டு பிளசிஸிக்கு இக்கட்டான சூழ்நிலைகளில் ஆலோசனை வழங்குவேன். ஆனாலும் அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்வது போன்ற எந்த விதமான விஷயங்களிலும் தலையிட மாட்டேன் என விராட் கோலி கூறினார்’ என்று இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

RCB, VIRATKOHLI, IPL, IRFANPATHAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்