“என் ஆட்டம் இன்னும் முடியல..!”.. வேறலெவல் வெற்றிக்கு பின் RCB தினேஷ் கார்த்திக்கின் வைரல் பேச்சு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி வரை பேட்டிங் செய்து பெங்களூரு அணியை வெற்றி பெற வைத்தது குறித்து தினேஷ் கார்த்திக் பகிர்ந்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 13-வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் டு பிளேசிஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 70 ரன்களும், ஹெட்மயர் 42 ரன்களும் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு பெங்களூரு அணி விளையாடியது. ஆனால் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெங்களூரு அணி தடுமாறியது. முதல் 10 ஓவர்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்ததால் பெங்களூரு அணி தோற்றுவிடும் என்றே பலரும் நினைத்தனர். இந்த இக்கட்டான சமயத்தில் களமிறங்கிய தமிழக வீரரான தினேஷ் கார்த்திக் மற்றும் சபாஷ் அகமது ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
அதனால் 19.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. இதில் சபாஸ் அகமது 26 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 1 சிக்ஸ் என 44 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்து அசத்தினார்.
போட்டி முடிந்த பின் பேசிய தினேஷ் கார்த்திக், ‘இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நிச்சயம் எனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என தெளிவாக இருந்தேன். கடந்த ஆண்டு ஐபிஎல் எனக்கு சரியானதாக அமையவில்லை. இந்த ஆண்டு சிறப்பாக விளையாடி என்னை நானே திருப்தி செய்ய நினைத்தேன். எனது ஆட்டம் இன்னும் முடியவில்லை என்பதை எனக்கு நானே உறுதிப்படுத்திக் கொண்டேன்.
நான் களமிறங்கிய போது ஓவருக்கு 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது. இதுபோன்ற கடினமான சூழ்நிலையை சமாளித்து விளையாட நான் நிறைய பயிற்சி எடுத்திருக்கிறேன். அதனால் பதட்டப்படாமல் நிதானமாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று நினைத்தேன். எனது விக்கெட் விழுந்தால் பின்னால் வருபவர்கள் சிரமப்படுவார்கள் என்பதனால் நிச்சயம் இறுதிவரை நின்று போட்டி முடித்துக் கொடுக்க நினைத்தேன். அந்த வகையில் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றதில் மகிழ்ச்சி’ என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "விராட் கோலிக்கு தான் இப்டி எல்லாம் நடக்கணுமா?.." மைதானத்தில் கதறி அழுத ரசிகை.. மொத்த 'RCB' ஃபேன்ஸ் முகத்துலயும் சோகம்
- ‘எப்பா என்னா கேட்ச்..’ முன்னாள் RCB வீரரை மிரள வைத்த விராட் கோலி.. செம வைரல்..!
- “ஜடேஜாவால தோனிக்கு தான் தலைவலி”.. சிஎஸ்கே அணியில் இருக்கும் பிரச்சனை.. முன்னாள் வீரர் பரபரப்பு கருத்து..!
- “வாய்ப்புக்காக ரொம்ப காலமா காத்திருந்தாரு.. இப்போ வேறலெவல்ல விளையாடுராப்ல”.. இளம் வீரரை ஸ்பெஷலாக பாராட்டிய ராகுல்..!
- யாரு சாமி இவரு..! மனுசன் எக்ஸ்பிரஸ் ரயில் வேகத்துல பந்து போடுறாரே.. ஸ்பீடு எவ்ளோ தெரியுமா..?
- Instagram-ல் சுப்மன் கில் போட்டோவை பார்த்து கோலி சொன்ன விஷயம்.. ‘ஓ.. இத வாங்கிக் கொடுத்ததே நீங்க தானா..!’ வைரலாகும் கமெண்ட்..!
- “இன்னும் அந்த ரிப்போர்ட் வரல”.. தீபக் சஹார் எப்போ வருவார்..? சிஎஸ்கே சிஇஓ புது அப்டேட்..!
- IPL2022: ”இன்னைக்கு சில தெரிஞ்ச முகங்களோட மோத வேண்டி இருக்கு”…. RCB அணி பகிர்ந்த நாஸ்டால்ஜியா photos !
- "டு பிளெஸ்ஸிஸ் கேப்டன்சி'ல ஒரு ஸ்பெஷலும் இல்ல.." ஓப்பனாக பேசிய முன்னாள் வீரர்.. ஏன் அப்படி சொன்னாரு?
- ‘பாவம் மனசு ஒடஞ்சி போய்ட்டாங்க’.. மறுபடியும் சொதப்பிய SRH.. வைரலாகும் காவ்யா மாறன் போட்டோ..!