IPL 2022 : பல கஷ்டம் தாண்டி சாதித்த இந்திய வீரருக்கு.. பஞ்சாப் கிங்ஸ் அணி கொடுத்த கேப்டன் பொறுப்பு..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற IPL தொடரின் 15 வது சீசன் வரும் மார்ச் 26 ஆம் தேதி துவங்குகிறது. இதற்கான போட்டி அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கான கேப்டன் யார் என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கிறது அந்த அணி நிர்வாகம்.

Advertising
>
Advertising

நல்ல சான்ஸை மிஸ் பண்ணிட்டாரே... சஞ்சு சாம்சன் செய்த தவறு! போட்டியின் நடுவே மைதானத்தில் கோபமடைந்த ரோகித் சர்மா!

IPL ஏலம்

IPL போட்டிகளுக்கான பிரம்மாண்ட எல்லாம் கடந்த பிப்ரவரி 12, 13 ஆம் தேதிகளில் நடைபெற்றன. பெங்களூருவில் நடந்த இந்த ஏலத்தில் 370 இந்திய வீரர்கள், 220 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 590 வீரர்கள் கலந்துகொண்டனர். இதில், முன்னணி வீரர்களை தக்கவைக்க ஒவ்வொரு அணியும் போராடியது. பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரையில் ஐபிஎல் கோப்பையை வென்றது இல்லை. ஆகவே, இந்த முறை அதனை சாதிக்கும் நோக்கத்தில் அந்த அணி நிர்வாகம் ஏலத்தில் இறங்கியது.

ஏற்கனவே பஞ்சாப் அணியில் இருந்த மயங்க் அகர்வாலை 14 கோடிக்கும் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை ரூ.4 கோடிக்கும் தக்கவைத்தது அந்த அணி.

யார் கேப்டன்

பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த ராகுல் விடுவிக்கப்பட்ட நிலையில், அந்த அணியின் கேப்டன் பொறுப்பு யாருக்கு வழங்கப்படும் என கேள்வி எழுந்தது. இதனை அடுத்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா உள்ளிட்டோர் பஞ்சாப் அணியின் கேப்டனாக  மயங்க் அகர்வாலை நிர்ணயிக்க வேண்டும் என தெரிவித்துவந்தனர்.

இதற்கிடையே, இன்று பஞ்சாப் அணி நிர்வாகம்  வெளியிட்டுள்ள செய்தியில்,  மயங்க் அகர்வால் பஞ்சாப் அணியை வழிநடத்துவார் என அறிவித்துள்ளது. சமீப காலங்களாக பல சறுக்கல்களை சந்தித்து வந்த அகர்வாலுக்கு கேப்டன் பதவி கிடைத்திருப்பதை கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இதுகுறித்துப் பேசிய அகர்வால்," 2018 ஆம் ஆண்டு முதல் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறேன். தற்போது எனக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த பொறுப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன். எங்களுடைய அணியில் பல திறமைவாய்ந்த இளம் வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். ஒன்றுபட்ட முயற்சியின் மூலம் இந்த முறை முதல் தடவையாக எங்களது அணி கோப்பையை வெல்லும் என நம்புகிறேன்" என்றார்.

"ரோஹித் கிட்ட கொஞ்சம் கவனமா தான் இருக்கணும்.." எச்சரிக்கும் முன்னாள் வீரர்.. ஓஹோ, இதான் விஷயமா?

IPL 2022, NEW CAPTAIN, PUNJAB KINGS TEAM, NEW CAPTAIN OF A PUNJAB KINGS TEAM, TEAM MANAGEMENT, பஞ்சாப் கிங்ஸ் அணி, கேப்டன், பஞ்சாப் அணி நிர்வாகம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்