அம்மாடியோவ்..! என்னா அடி.. ‘ரெண்டாக உடைந்த ஸ்டம்ப்’.. RR-ஐ மிரள வைத்த பாண்ட்யா..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஹர்த்திக் பாண்டியா வீசிய பந்தால் ஸ்டம்ப் இரண்டாக உடைந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | “ரூ. 8.25 கோடி கொடுத்து எடுத்த வீரருக்கு ஒரு மேட்ச்ல கூட வாய்ப்பு தரல”.. MI என்ன ப்ளான் தான் இருக்காங்க? விளாசிய முன்னாள் வீரர்..!

ஐபிஎல் தொடரின் 24-வது லீக் போட்டி நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஹர்த்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது.

இதில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 87 ரன்களும், அபிநவ் மனோகர் 43 ரன்களும், டேவிட் மில்லர் 31 ரன்களும் எடுத்தனர். ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை சஹால், ரியான் பராக் மற்றும் குல்தீப் ஷென் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

இதனை அடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்தது. ஆனால் குஜராத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ராஜஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அந்த அணியின் ஜோஸ் பட்லர் மட்டுமே 54 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் மட்டுமே ராஜஸ்தான் அணி எடுத்தது. அதனால் 37 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி அபார வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இப்போட்டியில் குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா வீசிய பந்து ஸ்டம்பை உடைத்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் போட்டியின் 8-வது ஓவரின் 3-வது பந்தை எதிர்கொண்ட ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், பந்து அடித்துவிட்டு ரன் எடுக்க ஓடினார். அப்போது ஹர்திக் பாண்டியா நேராக ஸ்டம்பை நோக்கி பந்தை எறிந்தார். பந்து வேகமாக பட்டதில் நடு ஸ்டம்ப் இரண்டாக உடைந்தது. மேலும் சஞ்சு சம்சன் ரன் அவுட் ஆகி வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | குரான் வாசிச்ச அப்பறம் தான் தேரோட்டம்.. மத நல்லிணக்கத்திற்கு சாட்சி சொல்லும் பாரம்பரியம்..!

 

CRICKET, IPL, IPL 2022, HARDIK PANDYA, GUJARAT TITANS, RAJASTHAN ROYALS, SANJU SAMSON, TITANS VS ROYALS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்