விசா விவகாரம்.. மொயின் அலி எப்போ இந்தியா வருவார்..? சிஎஸ்கே சிஇஓ விளக்கம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மொயின் அலி இந்தியா வர விசாவில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து சிஎஸ்கே அணையின் சிஇஓ காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.

Advertising
>
Advertising

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. முதல் போட்டி வரும் 26-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இதற்காக இரண்டு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த சூழலில் இலங்கை தொடரின்போது விளையாடிய இளம் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹாருக்கு காயம் ஏற்பட்டது. அதனால் ஐபிஎல் தொடரில் அவர் விளையாடுவது சந்தேகம் ஆகியுள்ளது. இது சிஎஸ்கே அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் விளையாடும் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலிக்கு விசா கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அதனால் அவர் இன்னும் இந்தியா வரவில்லை. இது சிஎஸ்கே அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.

இதுகுறித்து தெரிவித்த சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன், ‘மொயின் அலி இந்தியா வர அனுமதிக்கும் விசா அவருக்கு இன்னும் கிடைக்கவில்லை. அதற்கான காரணம் என்ன என்பது எங்களுக்கு தெரியவில்லை. ஆனாலும் விரைவில் அவருக்கு விசா கிடைக்கும் என நம்புகிறோம். தேவையான ஆவணங்கள் அனைத்தும் அவர் தரப்பிலிருந்து சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தும் அவருக்கு விசா கிடைக்கவில்லை. விசா கிடைத்ததும் இந்தியா வந்து விடுவார். அதனை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளோம்’ என காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இனி விசா கிடைத்து மொயின் அலி இந்தியா வந்தாலும், 2 வாரங்களுக்கு பஜோ பபுளில் இருக்க வேண்டிய சூழல் ஏற்படும். அதனால் முதல் சில போட்டிகளில் அவர் விளையாட முடியாத சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் சிஎஸ்கே அணிக்கு சிக்கல் எழுந்துள்ளது.

CSK, IPL, MOEENALI, VISA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்