IPL 2022: ஒரே ஓவரில் போட்டியின் முடிவை மாற்றிய சாஹல்…. சீட்நுனிக்கு வந்த ரசிகர்கள்… கடைசிவரை திக் திக்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நேற்று நடந்த ஐபிஎல் போட்டி இந்த சீசனின் சிறப்பான போட்டிகளில் ஒன்றாக அமைந்துள்ளது.

Advertising
>
Advertising


பட்லர் இரண்டாவது சதம்…

நேற்று(ஏப்ரல் 18) ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டி இந்த சீசனின் விறுவிறுப்பான போட்டிகளில் ஒன்றாக அமைந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரார் ஜோஸ் பட்லரின் சிறப்பான சதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 217 ரன்கள் சேர்த்தது. இந்த சீசனில் பட்லர் அடிக்கும் இரண்டாவது சதம் இதுவாகும்.

ஷாக் கொடுத்த கொல்கத்தா….

இந்த இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய கே கே ஆர் அணி நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பது போல அதிரடியில் புகுந்து விளையாடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பின்ச் சிறப்பாக விளையாடி 28 பந்துகளில் 58 ரன்கள் சேர்த்தார். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் சதத்தை நோக்கி வேகமாக சென்றுக் கொண்டிருந்தார்.

ஒரே ஓவரில் நான்கு விக்கெட்கள்…

இந்நிலையில் 17 ஆவது ஓவரை வீச வந்த சஹால் அந்த ஓவரில்  ஸ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், ஷிவம் மவி, மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகிய நான்கு பேரின் விக்கெட்களைக் கைப்பற்றினார். இதில் கடைசி மூன்று விக்கெட்களை அடுத்தடுத்து கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை படைத்தார். இந்த ஓவருக்குப் பிறகு கே கே ஆர் –ன் வெற்றி வாய்ப்பு மங்கியது. ஆனாலும் உமேஷ் யாதவ் கடைசி நேர அதிரடி கொஞ்சம் பரபரப்பை ஏற்படுத்தியது. இறுதியில் ராஜஸ்தான் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

ஆரஞ்ச் கேப், பர்ப்பிள் கேப்…

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைச் சேர்ந்த இரு வீரர்கள் இந்த ஐபிஎல் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.  அதிக ரன்களோடு ஆரஞ்ச் கேப்பை ஜோஸ் பட்லரும், அதிக விக்கெட்கள் எடுத்து பர்ப்பிள் கேப்பை யுஸ்வேந்திர சாஹலும் கைப்பற்றியுள்ளனர்.

RAJASTHAN-ROYALS, CHAHAL, BUTLER, IPL2022

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்