‘வில்லியம்சனுக்கு என்னதான் ஆச்சு..?’.. அவரை எடுக்காததுக்கு ‘இதுதான்’ காரணமா..? சரமாரியாக கேள்வி எழுப்பும் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ப்ளேயிங் லெவனில் கேன் வில்லியம்சன் ஏன் இடம்பெறவில்லை என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
14-வது சீசன் ஐபிஎல் தொடரின் 9-வது போட்டி இன்று (17.04.2021) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டி காக் (40 ரன்கள்) மற்றும் ரோஹித் ஷர்மா (32) நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனை அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாத்வ (10 ரன்கள்), இஷான் கிஷன் (12), ஹர்திக் பாண்ட்யா (7 ரன்கள்) உள்ளிட்டோர் சொற்ப ரன்கள் அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினர்.
இதில் பொல்லார்டு மட்டுமே 22 பந்துகளில் 35 ரன்கள் அடித்து ஆறுதல் அடித்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களை மும்பை அணி எடுத்தது. ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரை விஜய் சங்கர் மற்றும் முஜீப் உர் ரஹ்மான் தலா 2 விக்கெட்டுகளும், கலீல் அகமது 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இந்த நிலையில் இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் கேன் வில்லியம் சன் ஏன் ப்ளேயிங் லெவனில் இடம்பெறவில்லை ? என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். முன்னதாக கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளுக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி தோல்வியை தழுவியது. இந்த இரு போட்டிகளிலும் முதலில் ஹைதராபாத் அணி வெற்றி பெரும் நிலையில் இருந்தது. ஆனால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிலைத்து ஆடாததால், கைக்கு வந்த வெற்றியை ஹைதராபாத் அணி நழுவவிட்டது.
முன்னதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா, ஹைதராபாத் அணியின் ப்ளேயிங் லெவனில் கேன் வில்லியம்சன் இடம்பெறாதது குறித்து விமர்சனம் செய்திருந்தார். போட்டியை கடைசி வரை முடிக்க வில்லியம்சன் போன்ற அனுபவம் மிக்க வீரர் அணிக்கு தேவை என அவர் கருத்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்றைய போட்டியிலும் அவர் இடம்பெறாததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். ஆனால் கேன் வில்லியம்சன் காயம் காரணமாகதான் விளையாடாமல் உள்ளதாக சொல்லப்படுகிறது.
tform.twitter.com/widgets.js" charset="utf-8">
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘5 வருசத்துக்கு முன்னாடி பார்த்த தோனியே இல்ல இது’!.. ‘ஒரு கேப்டனா அவர் இதை செஞ்சே ஆகணும்’.. கம்பீர் சொன்ன அட்வைஸ்..!
- ‘இந்த 1 நிமிஷம் உங்க கணக்குதான்’!.. நேக்கா ‘அம்பயர்’ பக்கம் திருப்பிவிட்ட ரிஷப் பந்த்.. அஸ்வின் ஓவரில் நடந்த சுவாரஸ்யம்..!
- 'போதும்... போதும்... மீம்ஸ் பெருசா போயிக்கிட்டிருக்கு'!.. மோரிஸ் அடித்த 'அந்த' மாஸ் ஷாட்!.. இணையத்தில் விருந்து வைக்கும் ரசிகர்கள்!.. அப்படி என்ன ஸ்பெஷல்?
- 'இந்த பார்வைக்கு என்ன அர்த்தம்னு அப்போ புரியல... இப்ப புரியது'!.. டெல்லி அணியின் வெற்றியை... நூலிழையில் தட்டிப் பறித்த மோரிஸ்!.. திக் திக் சம்பவம்!!
- "இப்டி எல்லாம் ஆடுனா 'இந்தியா' டீம்'ல எப்படி'ப்பா 'சான்ஸ்' கெடைக்கும்?.." 'இந்திய' வீரர் மீது 'நெஹ்ரா' வைத்த கடுமையான 'விமர்சனம்'!!
- VIDEO: ‘கொஞ்சம் கூட யோசிக்கல’!.. கண் இமைக்கும் நேரத்தில் எடுத்த ‘ரன் அவுட்’.. திரும்பிப் பார்க்க வைத்த இளம்வீரர்..!
- VIDEO: எப்பா...! ‘விட்டா பந்துக்கு மேல பறந்துபோய் பிடிப்பாரு போல’.. மிரளவைத்த கேட்ச்..!
- ஏன் தோத்தீங்கனு இப்போ புரியுதா?... ஜெயிக்க வேண்டிய மேட்ச்யா!.. சன்ரைசர்ஸ் 'இத' பண்ணலனா ரொம்ப கஷ்டம்!.. உட்ராதீங்க யப்போவ்!!
- ‘சந்தேகமே வேண்டாம்’!.. ‘இனி அவருக்கு ப்ளேயிங் 11-ல இடம் கிடைக்குறது கஷ்டம்தான்’.. இளம்வீரரை கடுமையாக சாடிய முன்னாள் வீரர்கள்..!
- "'திறமை' மட்டும் இருந்தா போதாது... இதையும் மனசுல வெச்சு ஆள எடுங்க.." 'இந்திய' வீரரின் ட்வீட்டால் 'பரபரப்பு'.. "2 'மேட்ச்' முடியுறதுக்குள்ள 'Start' பண்ணிட்டாங்களே!!"