'எப்பா சாமி... ஒரு வழியா... ஐபிஎல் மீண்டும் நடக்கப் போகுது'!.. இறுதிப்போட்டிக்கும் தேதி குறிச்சாச்சு!.. முழு விவரம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நிறுத்தப்பட்டுள்ள ஐபிஎல் தொடர் மீண்டும் எப்போது தொடங்கும் என்பது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை காரணமாக, ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் வருண் சக்கரவர்த்திக்கு முதன் முதலாக கொரோனா தொற்று ஏற்பட, பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகிகளுக்கு கொரோனா உறுதியானது. பிறகு, சன்ரைசர்ஸ் வீரர் சாஹா, மேலும் சில கொல்கத்தா அணி வீரர்கள் என்று கொரோனா அடுத்தடுத்து பரவ மறுதேதி குறிப்பிடாமல் ஐபிஎல் தொடரை பிசிசிஐ ஒத்திவைத்தது. அதில் இன்னும் 31 ஆட்டங்கள் மீதமுள்ளன.  

இந்த நிலையில், ஐபிஎல் போட்டிகள் மீண்டும் செப்டம்பர் 19 அல்லது செப்டம்பர் 20ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் என்றும், அக்டோபர் 10ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்றும் ஸ்போர்ட்ஸ் டுடே செய்தி வெளியிட்டுள்ளது. இந்த 31 போட்டிகளில், 10 போட்டிகள் double headers-ஆக, அதாவது ஒரே நாளில் இரண்டு போட்டிகளாக நடத்தப்படு உள்ளது. 

அதேபோல், 7 single headers-ஆகவும், 4 பிளே-ஆஃப் போட்டிகள் என 31 போட்டிகளும் 21 நாளில் நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும், தலைமை செயல் அதிகாரிகளும் உறுதிப்படுத்தி உள்ளதாகவும், பிசிசிஐ அதிகாரிகள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் தெரிவித்ததாகவும் விளையாட்டு பத்திரிகையாளர் போரியா மஜூம்தார் ஸ்போர்ட்ஸ் டுடே யூடியூப் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். 

மேலும், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கான தேதியில் மாற்றம் செய்ய பிசிசிஐ விடுத்த கோரிக்கையும் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இங்கிலாந்து டூர் முடிந்த பிறகு, வீரர்கள் அமீரகத்தில் மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பிறகு விளையாட அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமின்றி, ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 19 வரை அமீரகத்தில் கரீபியன் பிரீமியர் லீக் நடைபெற உள்ளது. இப்போது அதன் தேதிகளில் மாற்றம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, நான்கில் இருந்து ஐந்து நாட்கள் முன்னதாகவே தொடரை முடித்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் தெரிகிறது. அதே வேளையில், அமீரகத்தில் நடைபெறுவதாக கூறப்பட்ட டி20 உலகக் கோப்பை தொடர் குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்