'ஐபிஎல்-க்காக டெஸ்ட் அட்டவணையில் சமரசம்'!?.. காய் நகர்த்திய பிசிசிஐ!.. தர்ம சங்கடத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் போட்டிகளை நடத்த டெஸ்ட் தொடரின் போட்டி அட்டவணை மாற்றப்படுமா என்ற கருத்துக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பதில் அளித்துள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 18 முதல் 22 வரை இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடைபெறுகிறது. இதற்கான விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஜூன் 2ம் தேதி இங்கிலாந்து கிளம்புகிறது.
அதைத் தொடர்ந்து, அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்கிறது. இதில், இங்கிலாந்து தொடரின் அட்டவணையை மாற்ற பிசிசிஐ கோரிக்கை வைத்ததாக தகவல்கள் வெளிவந்தன.
இங்கிலாந்து உடனான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 14ம் தேதி முடிவடைகிறது. நாட்டிங்காம், லார்ட்ஸ், லீட்ஸ், ஓவல் மற்றும் ஓல்ட் ட்ராஃபோர்டு ஆகிய ஸ்டேடியங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில், பிசிசிஐ முன்வைத்ததாக கூறப்படும் கோரிக்கை என்னவெனில், ஓல்ட் ட்ராஃபோர்டில் செப்டம்பர் 10ம் தேதி தொடங்கும் கடைசி டெஸ்ட் போட்டி தேதியை மாற்றி, சற்று முன்னதாகவே அதாவது ஜுலை மாதமே நடத்தலாம்.
இதன் மூலம், செப்டம்பர் மாதம் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை அங்கு நடத்த முடியும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
இதுகுறித்து, இங்கிலாந்து வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், கொரோனாவின் சவால்களை நாங்கள் எதிர்கொள்வதால், பிசிசிஐ உடன் தொடர்ந்து பேசி வருகிறோம். ஆனால், தேதிகளை மாற்றுவதற்கான கோரிக்கை எதுவும் வரவில்லை. ஐந்து டெஸ்ட் போட்டிகளுக்கான அட்டவணையில் எந்த மாற்றமும் இருக்காது என்றார்.
அதேசமயம், இங்கிலாந்து ஊடகங்கள், பிசிசிஐ தேதி மாற்றுவதற்கான கோரிக்கையை முன்வைத்தது என்று செய்தி வெளியிட்டு வருகின்றன. இதுகுறித்து டைம்ஸ் லண்டன் பத்திரிகையில் வெளியான செய்தியில், ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்காக, டெஸ்ட் தொடர் அட்டவணையை மாற்றுவது குறித்து இரு வாரியங்களின் அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பிசிசிஐ-யின் இந்த வேண்டுகோள் இங்கிலாந்து வாரியத்துக்கு மிகுந்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், கடைசி டெஸ்ட் போட்டிக்கான முதல் மூன்று நாள் டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்கப்பட்டுவிட்டதாகவும், இனி அதில் மாற்றம் செய்வது பெரும் தலைவலியாக இருக்கும் என்றும் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இங்கிலாந்து வாரிய செய்தித் தொடர்பாளர் மறுப்பு பதில், அனைத்து யூகத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. இங்கிலாந்தில் ஐபிஎல் நடத்தும் வாய்ப்பும் ஏறக்குறைய முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது.
மற்ற செய்திகள்
12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய ‘கனமழை’-க்கு வாய்ப்பு.. சென்னை நிலவரம் என்ன..? வானிலை மையம் தகவல்..!
தொடர்புடைய செய்திகள்
- வேறவழியில்ல.. மறுபடியும் டீம்ல இடம்பிடிக்க ‘இததான்’ பண்ணியாகணும்.. குல்தீப் யாதவின் பரிதாப நிலை..!
- ‘ஆஸ்திரேலியாவால் முடியாத ஒன்னை இந்தியா கையில் எடுத்திருக்காங்க’.. இதெல்லாம் ரொம்ப பெரிய விஷயம்.. பாகிஸ்தான் முன்னாள் ‘கேப்டன்’ புகழாரம்..!
- அவர் மட்டும் இல்லனா... இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் final-க்கே வந்திருக்காது!.. கோலி கண்டெடுத்த இளம் talent!
- 'அந்த நாளுக்காக... பல வருஷமா தவம் இருக்கோம்!.. இப்படி பண்ணிட்டீங்களே'!.. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அறிவிப்பு!
- ‘அடி தூள்’!.. பொறுப்பை கையில் எடுக்கிறாரா ராகுல் டிராவிட்?.. கசிந்த தகவல்.. எக்கச்சக்க எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
- 'நம்ம பவுலிங் அட்டாக் 'இப்படி' இருந்தா தான்... நியூசிலாந்தை சுருட்ட முடியும்'!.. டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்காக நெஹ்ரா போட்ட ஸ்கெட்ச்!
- ‘3 மாத சுற்றுப்பயணம்’!.. 2 விக்கெட் கீப்பர் போதாது, இன்னொருத்தர் வேணும்.. பிசிசிஐ எடுத்த ‘சூப்பர்’ முடிவு..!
- எப்படி விளையாடணும்?.. என்ன ரூல்ஸ்?.. எதுவுமே தெரியாம... டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை.. கேலி கூத்தாக்கும் ஐசிசி!.. கடும் விமர்சனம்!
- விரைவில் ஐபிஎல்!?.. இங்கிலாந்து அணி நிர்வாகத்தை... பக்காவாக லாக் செய்த பிசிசிஐ!.. வேற லெவல் ட்விஸ்ட்!
- முன்னாள் வீராங்கனைக்கு இப்படி ஒரு நிலையா?.. கண்டுகொள்ளாத பிசிசிஐ!.. சைலண்ட்டாக வேலையை முடித்த கோலி!.. ரொம்ப பெரிய மனசு!!