‘எச்சரிக்கை செய்த கிரிக்கெட் கிளப்புகள்’!.. ஐபிஎல் தொடரை ஒத்திவைக்கும் முன் நடந்த ‘அவசர’ மீட்டிங்கில் என்ன நடந்தது..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரை ஒத்திவைக்கும் முடிவை பிசிசிஐ பல கட்ட ஆலோசனைக்கு பிறகே எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரில் விளையாடிய வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, தேதி குறிப்பிடாமல் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. ஆனால் முதலில் தொடரை தள்ளி வைக்கும் எண்ணம் பிசிசிஐ இல்லை என சொல்லப்படுகிறது. பயோ பபுளை கடுமையாக்கி, மீதமிருக்கும் போட்டிகளை எப்படியாவது முடித்துவிடலாம், இப்போது விட்டால் பின்னர் நடத்த முடியாது என பிசிசிஐ நினைத்துள்ளது. இதனால் தொடரை தள்ளி வைக்கும் முடிவை முதலில் மறுத்தே வந்துள்ளது.

இதனை அடுத்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, முடிவுகளில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி எஞ்சியிருக்கும் அனைத்து போட்டிகளையும் மும்பை வான்கடே மைதானத்தில் மட்டுமே நடத்தும் முடிவுக்கு பிசிசிஐ வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த சமயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளர் எல்.பாலஜி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் சாஹா மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் வீரர் அமித் மிஸ்ரா என அடுத்து பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் வேறு வழியில்லாமல் ஐபிஎல் தொடரை ஒத்திவைக்கும் முடிவுக்கு பிசிசிஐ வந்துள்ளது.

இதனை அடுத்து நடந்த அவசர ஆலோசனை கூட்டத்தில், பல மாநில கிரிக்கெட் கிளப்களும் ஐபிஎல் தொடரை ஒத்திவைக்கும் முடிவையே கூறியுள்ளனர். மேலும் வீரர்களின் பாதுகாப்புதான் முக்கியம் என எச்சரிக்கை செய்துள்ளனர். இதனிடையே அரசியல் தலைவர்கள், வெளிநாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தொடரை நிறுத்த வேண்டும் என கூறி வந்தனர். இதனை அடுத்தே ஐபிஎல் தொடரை தேதிக் குறிப்பிடாமல் ஒத்திவைக்கும் முடிவை பிசிசிஐ எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்