BREAKING: 'ஐபிஎல்' வட்டாரத்தில் வேகமாக பரவும் 'கொரோனா'... 'பிசிசிஐ' எடுத்த 'அதிரடி' முடிவு!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

14 ஆவது ஐபிஎல் சீசன் தற்போது, இந்தியாவில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று நடைபெறவிருந்த போட்டி ஒத்தி வைக்கப்பட்டது, ஐபிஎல் வட்டாரத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையே நேற்றிரவு போட்டி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கொல்கத்தா அணியைச் சேர்ந்த வருண் சக்ரவர்த்தி (Varun Chakravarthy) மற்றும் சந்தீப் வாரியார் (Sandeep Warrier) ஆகியோர், கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டனர். அது மட்டுமில்லாமல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், வீரர்களில்லாமல், நிர்வாகத்தைச் சேர்ந்த சிலருக்கும், கொரோனா பரவியதாக தகவல் வெளியாகி, பின்னர் அவர்களுக்கு நெகடிவ் என்றும் கூறப்பட்டது.

இதனால், ஐபிஎல் தொடர் நடைபெறுவது குறித்து கேள்வி எழுந்தது. பயோ பபுள் இருந்த போதும், வீரர்களுக்கு கொரோனா பரவுவது அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், ஐபிஎல் தொடரை நிறுத்த வேண்டும் என பலர் தெரிவித்தனர். இதனிடையே, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்றுள்ள சஹாவிற்கும், டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் அமித் மிஸ்ராவிற்கும், கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது, மேலும் பதற்றத்தை உருவாக்கியது.

இந்நிலையில், பல அணிகளைச் சேர்ந்தவர்கள், கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு வருவதால், ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பிசிசிஐ தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், ஒரு வாரத்திற்கு பிறகு, ஐபிஎல் போட்டிகள் தொடர்ந்து நடைபெறுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்