'என்னது?.. அடுத்த IPLல இத்தன டீமா???'... 'ஓ... இதுதான் கங்குலி பிளானா?!!'... 'எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ள பரபரப்பு தகவல்!!!'...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் மேலும் அணிகள் சேர்க்கப்பட உள்ளதாக எதிர்பார்ப்பை எகிறவைக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்தாண்டு ஐபிஎல் தொடர் பெரிய வெற்றி பெற்றதை அடுத்து 2021 ஐபிஎல் தொடரை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த பிசிசிஐ திட்டம் தீட்டி வருகிறது. சமீபத்தில் ஒன்பதாவதாக புதிய ஐபிஎல் அணி ஒன்றை அறிமுகப்படுத்த பிசிசிஐ தலைவர் கங்குலி திட்டமிட்டு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த திட்டத்தை மாற்றி மொத்தமாக அடுத்த சீசனில் பத்து அணிகளை பிசிசிஐ அறிமுகம் செய்ய உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரில் தற்போது எட்டு  அணிகள் உள்ள நிலையில், முன்னதாக அதோடு புதிதாக ஒன்பதாவது ஐபிஎல் அணியை சேர்க்க பிசிசிஐ திட்டமிட்டது. அதற்கான வேலைகள் இந்தாண்டு ஐபிஎல் தொடரின் முடிவிலேயே தொடங்கி விட்டதாக கூறப்பட்ட நிலையில், புதிய ஐபிஎல் அணி குறித்த தகவலை அறிந்த பெரும் பணக்காரர்கள் அந்த அணியை வாங்க போட்டி போட்டு வருவதாக கூறப்பட்டது. அதில் முக்கியமாக அதானி குழுமம் மற்றும் சஞ்சீவ் கோயங்கா புதிய ஐபிஎல் அணிகளை வாங்க ஆர்வமாக இருப்பதாக கூறப்பட்டது.

மேலும் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன் லாலும் புதிய ஐபிஎல் அணியை வாங்க இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. அவர் பைஜூஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய அணியை வாங்கலாமெனவும் பேசப்பட்டது. இப்படி புதிய அணியை வாங்க பெரும் போட்டி உள்ள நிலையில், பிசிசிஐ தற்போது கூடுதலாக இரண்டு அணிகளை சேர்க்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி 2021 ஐபிஎல் தொடரில் 10 ஐபிஎல் அணிகளை பங்கேற்க வைக்க திட்டம் போடப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் இதற்கு டிசம்பர் 24ஆம் தேதி நடைபெற உள்ள பிசிசிஐ வருடாந்திரக் கூட்டத்தில் ஒப்புதல் பெற வேண்டியதும் அவசியம் என்பதால் மாநில கிரிக்கெட் அமைப்புகள் இதை ஒப்புக் கொண்டால் மட்டுமே இந்த திட்டம் நடைமுறைக்கு வர முடியும். அதாவது, அதிக மாநில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தால் அது சிக்கலாகவே அமையும். அத்துடன் புதிய அணிகளை அறிமுகம் செய்ய மெகா ஏலம் நடத்த வேண்டிய கட்டாயமும் உள்ளதால், அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் அந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனவும், புதிய ஐசிசி உறுப்பினர் மற்றும் தேர்வுக் குழு உறுப்பினர்கள் குறித்தும் அந்த கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்படுமெனவும் தெரிகிறது.

இதையடுத்து இந்த இரண்டு புதிய ஐபிஎல் அணிகள் எந்த இரண்டு நகரங்களை மையமாக கொண்டு அமையும் என்ற பெரும் கேள்வியும் எழுந்துள்ளது. இதில் ஒரு நகரம் அஹமதாபாத்தாக இருக்க அதிக வாய்ப்புள்ள நிலையில், அந்த அணியை அதானி குழுமம் வாங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மற்றொரு நகரமாக லக்னோ, கான்பூர் அல்லது புனே இருக்கலாம் என கூறப்படும் நிலையில், முன்பு 2 சீசன்கள் மட்டுமே விளையாடிய புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை சஞ்சீவ் கோயங்கா வாங்கி இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்