VIDEO: ‘என்ன திடீர்னு இப்படி மாறிடுச்சு’!.. மேட்சை நடத்தலாமா?.. வேண்டாமா?.. நேத்து போட்டியை ‘10 நிமிடம்’ தாமதமாக்கிய சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி-பெங்களூரு அணிகளுக்கு இடையேயான நேற்றை போட்டி 10 நிமிடம் தாமதமாக தொடங்கப்பட்டது.

நடப்பு ஐபிஎல் தொடரின் 22-வது லீக் போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 171 ரன்களை குவித்தது.

இதில் அதிகபட்சமாக பெங்களூரு அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஏபி டிவில்லியர்ஸ் 75 ரன்கள் அடித்தார். டெல்லி அணியைப் பொறுத்தவரை இஷாந்த் ஷர்மா, அமித் மிஸ்ரா, அக்சர் படேல், அவேஷ் கான் மற்றும் ரபாடா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்கள் முடிவில் 170 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 1 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணியிடம் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டது. இதில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 58 ரன்களும், ஹெட்மெயர் 53 ரன்களும் எடுத்தனர். பெங்களூரு அணியைப் பொறுத்தவரை ஹர்சல் படேல் 2 விக்கெட்டுகளு, முகமது சிராஜ் மற்றும் கைல் ஜேமிசன் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

இந்த நிலையில் இப்போட்டியின் 2-வது இன்னிங்ஸின்போது, திடீரென மைதானத்தில் காற்று பலமாக வீச ஆரம்பித்தது. இதனால் போட்டியை நடத்தலாமா? வேண்டாமா? என அம்பயர்கள் ஆலோசனை மேற்கொண்டர். இதனை அடுத்து சில நிமிடங்களில் நிலைமை சீரானதும் போட்டி நடைபெற்றது. இதனால் சுமார் 10 நிமிடங்கள் தாமதமாக போட்டி தொடங்கப்பட்டது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்