VIDEO: ‘6 வருசமா கோலி இப்படி அவுட்டானதே இல்ல’!.. யாருப்பா அந்த பையன்..? வியந்துபோன விராட் கோலி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி ரன் அவுட்டான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் (IPL) தொடரின் 43-வது லீக் போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி (Virat Kohli) பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தனர். அதிகபட்சமாக எவின் லூயிஸ் 58 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 31 ரன்களும் எடுத்தனர். பெங்களூரு அணியைப் பொறுத்தவரை ஹர்சல் படேல் 3 விக்கெட்டுகளும், ஷாபாஸ் அகமது மற்றும் சாஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஜார்ஜ் கார்டன் மற்றும் டேனியல் கிறிஸ்டியன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி விளையாடியது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். ஆரம்பம் முதலே இந்த கூட்டணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அப்போது முஸ்தபிசுர் ரஹ்மான் வீசிய 6-வது ஓவரில் போல்டாகி தேவ்தத் படிக்கல் (22 ரன்கள்) வெளியேறினார்.

இதனை அடுத்து களமிறங்கிய கே.எஸ்.பரத்துடன் விராட் கோலி கூட்டணி அமைத்து அதிரடி காட்டினார். அப்போது கிறிஸ் மோரிஸ் வீசிய 7-வது ஓவரின் 3-வது பந்தை விராட் கோலி எதிர்கொண்டார். அந்த பந்தை ஸ்லீப்பில் அடிக்க அது கேட்சானது. ஆனால் அந்த இடத்தில் நின்ற ரியான் பராக் (Riyan Parag) கேட்ச் பிடிக்க தவறிவிட்டார்.

இதனை அடுத்து அந்த ஓவரின் 5-வது பந்தில் மீண்டும் அதேபோல் அடித்துவிட்டு விராட் கோலி ரன் எடுக்க ஓடினார். ஆனால் பந்தை வேகமாக பிடித்த ரியான் பராக், வேகமாக வீசி விராட் கோலியை ரன் அவுட் செய்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத விராட் கோலி, அந்த ரன் அவுட்டைப் பார்த்து வியந்துபோனார். ஐபிஎல் வரலாற்றில், 2015-ம் ஆண்டுக்கு பின் தற்போதுதான் விராட் கோலி ரன் அவுட்டாகி வெளியேறிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய மேக்ஸ்வெல், கே.எஸ்.பரத்துடன் கூட்டணி அமைத்து அதிரடியாக விளையாடினார். அதனால் 17.1 ஓவர்கள் முடிவில் 153 ரன்கள் எடுத்து பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 50 ரன்களும், கே.எஸ்.பரத் 44 ரன்களும் எடுத்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்