VIDEO: அடிச்ச வேகத்துக்கு பந்து பறக்கும்னு பார்த்தா... என்ன இப்படி ஆகிருச்சு.. ரிஷப் பந்த் பேட்டிங் செய்தபோது நடந்த சுவாரஸ்யம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின்போது டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பேட்டை காற்றில் பறக்க விட்ட வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி நேற்று துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்களை எடுத்தது.

இதில் அதிகபட்சமாக அப்துல் சமத் 28 ரன்களும், ரஷித் கான் 22 ரன்களும் எடுத்தனர். டெல்லியை அணியைப் பொறுத்தவரை ரபாடா 3 விக்கெட்டுகளும், அன்ரிச் நார்ட்ஜே மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி, 17.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 139 ரன்களை எடுத்தது. இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி டெல்லி வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 47 ரன்களும், ஷிகர் தவான் 42 ரன்களும், ரிஷப் பந்த் 35 ரன்களும் எடுத்தனர்.

இந்த நிலையில் இப்போட்டியில் பேட்டிங் செய்த ரிஷப் பந்த் பேட்டை காற்றில் பறக்க விட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அதில், போட்டியின் 15-வது ஓவரை ஹைதராபாத் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை எதிர்கொண்ட ரிஷப் பந்த், அதை சிக்சருக்கு விளாச முயன்றார். ஆனால் எதிர்பாராத விதமாக பேட் அவரது கையில் இருந்து நழுவி சென்றது.

உடனே விக்கெட் கீப்பர் சாஹா பந்தை கேட்ச் பிடித்துவிட்டு அம்பயரிடம் அவுட் கேட்டார். அதேபோல் ரஷித் கானும் அம்பயரிடம் முறையிட்டார். ஆனால் ரிஷப் பந்த் பேட்டை தவறவிட்டதால் அம்பயர் அவுட் கொடுக்கவில்லை. இதனை அடுத்து ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அந்த பேட்டை எடுத்து ரிஷப் பந்திடம் கொடுத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்