‘இனி அதுக்கெல்லாம் அனுமதி கிடையாது’!.. நாடு முழுவதும் கொரோனா பரவல் எதிரொலி.. ஐபிஎல் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஐபிஎல் வீர்ரகள் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

14-வது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதுவரை 22 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. கொரோனா பரவல் காரணமாக குறிப்பிட்ட மைதானங்களில் மட்டுமே போட்டிகள் நடைபெற்று வருகின்றது. முதல் பாதி போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மற்றும் மும்பை வான்கடே மைதானங்களில் மாறிமாறி நடைபெற்றன. இந்த நிலையில் மீதி இருக்கும் போட்டிகள் டெல்லி மற்றும் அகமதாபாத் மைதானங்களில் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இது ஐபிஎல் தொடரில் வீரர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் சமீபத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி வந்த தமிழக வீரர் அஸ்வின், ஐபிஎல் தொடரில் இருந்து பாதியில் விலகியுள்ளார்.

அதேபோல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விளையாடி வந்த ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஜாம்பா, கேன் ரிச்சர்டசன், ஆண்ட்ரூ டை உள்ளிட்ட வீரர்கள் நாடு திரும்பும் முடிவை எடுத்துள்ளனர்.

இந்த நிலையில் வீரர்களின் பாதுகாப்பு கருதி பிசிசிஐ சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி வீரர்கள் வெளியில் உணவு ஆர்டர் செய்து உண்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதனால் வீரர்கள் விரும்பும் உணவை, அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்களிலேயே தயார் செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் லிப்ட் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் வரும் மேதம் மாதம் 1ம் தேதி முதல் இந்திய கிரிக்கெட் வீரர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இது தடுப்பூசி செலுத்த விருப்பம் தெரிவிக்கும் வீரர்களுக்கு மட்டுமே செலுத்தப்படும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்