‘எகிற வைத்த எதிர்பார்ப்பு’!.. ஏலத்தில் ‘சச்சின்’ மகனை அலேக்கா தூக்கிய அணி.. விலை எவ்வளவு தெரியுமா..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகனை மும்பை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

ஐபிஎல் 14-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் இன்று (18.02.2021) சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் என மொத்தமாக 1,114 பேர் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர். இதில் 292 வீரர்களை இறுதி செய்த பிசிசிஐ, சமீபத்தில் அந்த பட்டியலை வெளியிட்டது.

இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் போட்டிபோட்டு வீரர்களை வாங்கி வருகின்றன. இதில் சென்னை அணி, இங்கிலாந்து ஆல்ரவுண்டர் மொயின் அலியை 7 கோடி ரூபாய்க்கும், கர்நாடகா வீரர் கிருஷ்ணப்பா கவுதமை 9.25 கோடி ரூபாய்க்கும் எடுத்துள்ளது.

இதில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் இந்திய வீரர் புஜாராவை 50 லட்சம் ரூபாய் கொடுத்து சென்னை அணி ஏலத்தில் எடுத்தது. கடந்த 2014ம் ஆண்டு கடைசியாக பஞ்சாப் அணியின் சார்பாக புஜாரா விளையாடினார். அதன்பிறகு 7 வருடங்களாக எந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்காத நிலையில், சென்னை அணி அவரை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் கடந்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக விளையாடிய பியூஸ் சாவ்லாவை மும்பை அணி 2.40 கோடி ரூபாய் கொடுத்து எடுத்துள்ளது.

இந்த நிலையில் முதல் முறையாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் ஏலத்தில் இடம்பிடித்தார்.

இவருக்கு அடிப்படை விலையாக 20 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. தற்போது அதே விலையில் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்