‘இதுவரை ஒரு தடவை கூட கப் ஜெயிக்கல’!.. பெயரை மாற்றப் போகும் ஐபிஎல் அணி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் டி20 தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் ஏலம் வரும் 18-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் 8 அணிகள் பங்கேற்கின்றன. ஏலத்தில் பங்கேற்கும் 8 அணிகளும், தாங்கள் தக்க வைக்கும் வீரர்கள், விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை பிசிசிஐயிடம் வழங்கிவிட்டன.
ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க ஏராளமான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்தனர். மொத்தமாக 1,114 சர்வதேச மற்றும் உள்நாட்டு வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து பெயர்களைப் பதிவு செய்திருந்தனர். இதில் 292 வீரர்களை இறுதி செய்து பிசிசிஐ பட்டியலை வெளியிட்டது.
இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இந்த முறை 16 வீரர்களைத் தக்கவைத்துக்கொண்டு 9 வீரர்களை விடுவித்துள்ளது. ஏலத்தில் 5 வெளிநாட்டு வீரர்களையும், 4 உள்நாட்டு வீரர்களையும் கிங்ஸ் லெவன் அணியால் வாங்க முடியும். தற்போது அந்த அணியிடம் ரூ.53.20 கோடி இருப்பில் இருக்கிறது.
இந்நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இந்த ஐபிஎல் சீசனில் இருந்து பெயரை மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீண்ட காலமாகவே தங்கள் அணியின் பெயரை மாற்றவேண்டும் என பிசிசிஐயிடம் அந்த அணி நிர்வாகம் கோரி வந்தது. இதனை அடுத்து இந்த ஆண்டு ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பாகவே கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
அதன்படி, வரும் 14-வது ஐபிஎல் சீசனில் இருந்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பெயர், ‘பஞ்சாப் கிங்ஸ்’ என அழைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 ஆண்டு ஐபிஎல் வரலாற்றில் ஒரு முறை கூட கோப்பையை வெல்லாததால், இந்த பெயர் மாற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘சதமடித்து அசத்திய அஸ்வின்’!.. இதை அவரை விடவும் அதிகமாக ‘செலிப்ரேட்’ பண்ணது இவர்தான்.. அதிர்ந்த சேப்பாக்கம்..!
- VIDEO: கடைசியில ‘அஸ்வின்’ கிட்டையும் அதை கேட்டாச்சா.. சேப்பாக்கத்தில் ரசிகர் கேட்ட கேள்வி.. ‘செம’ வைரல்..!
- 'ஹெலிகாப்டரில் இருந்து ஏரியல் வியூல...' 'சென்னை டெஸ்ட் மேட்ச்சை ரசித்த பிரதமர்...' - ட்விட்டரில் போட்டோ ஷேர்...!
- ‘இனி கிரிக்கெட் ஆடுவனானு எனக்கே டவுட் வந்துருச்சு’.. இப்படி பின்னி எடுப்பார்னு நெனக்கவே இல்ல.. இந்திய பேட்ஸ்மேனை பார்த்து மிரண்டபோன இங்கிலாந்து வீரர்..!
- ‘எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஐபிஎல் ஏலம்’!.. கேதர் ஜாதவ்-ன் அடிப்படை விலை என்ன தெரியுமா..? பிசிசிஐ அதிரடி அறிவிப்பு..!
- ‘2-வது டெஸ்ட் போட்டி’.. டிக்கெட் எடுத்து ஆர்வமுடன் காத்திருக்கும் ரசிகர்கள்.. சேப்பாக்கம் மைதானத்தில் கட்டுப்பாடுகள் என்னென்ன..?
- ‘மனசு ரொம்ப வேதனையா இருக்கு’.. ‘என் மேல் இப்படி ஒரு குற்றச்சாட்டா..?’ முன்னாள் கிரிக்கெட் வீரர் உருக்கமான விளக்கம்..!
- பிசிசிஐ வச்ச கோரிக்கை.. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் எடுத்த முக்கிய முடிவு.. அடுத்த ஆட்டத்துக்கு ரெடியாகும் நடராஜன்..!
- 'நான் அப்போவே உங்கள வார்ன் பண்ணேன்...' 'இப்படி பண்ணாதீங்கன்னு...' நியாபகம் இருக்கா...? - முன்னாள் வீரர் போட்ட பதிவு...!
- 'அமாவாச.. நீதான் பேசுறியா?'.. அப்போ இது வரலாற்றுப் பதிவு தான்!.. இந்திய வீரரை வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவானுடன் ஒப்பிட்டு பாராட்டிய மஞ்ச்ரேக்கர்!